அந்த மாதிரி தொழில் செய்யும் நடிகைகள்.. கைது செய்தும் தண்டனை பெறாமல் தப்பிப்பது இப்படி தான்..

0
Follow on Google News

விபச்சார வழக்கில் சிக்கிய எந்த நடிகையும் கடைசி வரையில் தண்டனை பெற்றதாக மட்டும் செய்தியே வருவதில்லை, அது ஏன் என்பது பற்றிய செய்தி தான் இது. நடிகை புவனேஸ்வரி இவரது கைதுதான் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரையும் விபச்சார வழக்கில் பொறி வைத்துதான் பிடித்தனர் போலீசார். இவருடன் மேலும் இரு ‘அழகிகளும்’ கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் புவனேஸ்வரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தை பத்திரிகை வெளியிடப் போக, அது பெரும் பிரச்சினை ஆனது. சிறையிலிருந்து வெளியில் வந்த புவனேஸ்வரி, ஒரு கட்சியின் பொதுச் செயலாளராகக் கூட ஆனார். வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

அதே போன்று நடிகை வினிதா தொண்ணூறுகளில் மிகவும் கிளாமர் நாயகியாக வலம் வந்தவர். பிரபு, சரத்குமார் என அன்றைய முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டவர். விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் காரில் உல்லாசமாக இருக்க ரூ.1.5 லட்சம் வரை வாங்கிக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை வினிதா மற்றும் தாயாருடன் கடந்த 2003 வருடம் மே மாதம் கைது செய்யப்பட்டனர்.

நடிகை வினிதாவின் விபச்சார வழக்கு ஏப்ரல் 2004 ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, எந்தவித ஆதாரமும் இல்லாததால், வினிதா, லட்சுமி, சங்கர்ஆகியோரை விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். விபச்சார தடுப்பு வழக்குகளின் போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளை போலீஸார் சரிவர கடைப்பிடிக்கவில்லை என்றும் நீதிபதி நடிகை வினிதா விபச்சார வழக்கு தீர்ப்பின் கருத்து தெரிவித்து இருந்தார்.

அதே போன்று பரங்கிமலை அருகே உள்ள ஒரு ஓட்டலில் விபச்சார வழக்கில் நடிகை பத்மா கைது செய்யப்பட்டார். இவர் காஞ்சனா, வீராச்சாமி போன்ற படங்களில் நடித்தவர். இவர் மீது வழக்கு என்னாச்சு என்று தெரியவில்லை, இது போன்று பல சின்னத்திரை சீரியல் நடிகைகள், துணை நடிகைகள்,என பலர் விபச்சார வழக்கில் சிக்கியிருந்தாலும் கூட, அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் நீதி மன்றத்தில் இருந்து தப்பித்து கொள்கிறார்கள்,

இதுவரை விபச்சார வழக்குகளில் கைதான எந்த நடிகையாவது இறுதியில் தண்டிக்கப்பட்டுள்ளாரா என்றால்.. ஓரு சிலரை தவிர்த்து பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும், கைது செய்யப்படும்போது கிளம்பும் பரபரப்பு, கொஞ்சநாளில் வழக்கு நடக்கும்போது நீர்த்துப் போய், கொஞ்ச நாளில் மக்களுக்கு மறந்தே போகிறது, கடைசி வரை தண்டனையே கிடைக்காத இந்த மாதிரி வழக்குகளுக்காக எதற்காக ‘பொறி’ வைத்துப் பிடிக்க வேண்டும் என பலருக்கு புரியாத கேள்வியாக அமைத்துள்ளது.

விபச்சார வழக்கில் சிக்கிய எந்த நடிகையும் கடைசி வரையில் தண்டனை பெறாமல் தப்புவது குறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில். பணம் கொடுத்து உடலுறவில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம், இது போன்ற செயல்களை விபச்சாரம் தொழில் என்று அழைக்கப்படுவார்கள், ஆனால் மேஜரானா ஆண்- பெண் இருவர் விருப்பம் கொண்டு உடலுறவில் ஈடுபடுவது சட்டப்படி தவறில்லை.

இந்நிலையில் விபசார வழக்கில் சிக்கும் நடிகைகளுக்கு பணம் பரிவர்த்தனை நடந்ததை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும் போது அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விபச்சார வழக்கில் சிக்கும் நடிகைகள் விடுதலை செய்யப்படுகின்றனர் என வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். மேலும் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண் பணத்திற்காக தான் அதை செய்தார் என்பதை நிரூபிக்க முடியாது என்பதை விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகளும் அதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.