அழிவின் விளிம்பில் தமிழ் சினிமா… ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது… நடிகர்களின் அடுத்த தொழில் என்ன.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் தற்பொழுது வியாபார நோக்கில் வெளியாகும் படங்களினால் தமிழ் சினிமா அழிவின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா முன்பெல்லாம் திரையரங்குகளில் படம் வெளியாகி வெற்றியை பெற்ற பின்பு தான், அந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமைகள் அதிக விலை கொடுத்து வழங்கப்படும். இதனால் படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்பொழுது படம் வெளியாவதற்கு முன்பே, அந்த படம் நன்றாக இருக்கிறதா.? இல்லையா.? என்பது பற்றி கவலைப்படாமல் ஓடிடி மற்றும் சேட்டிலைட் போன்ற விற்பனை மூலம் பெரும் லாபத்தை படத்தின் தயாரிப்பாளர்கள் சம்பாதித்து விடுகிறார்கள். அதனால் பெரும்பாலும் தற்பொழுது வெளியாகும் படத்தின் கதைக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. வியாபார ரீதியில் படம் லாபத்தை பெற்றால் போதும் என்கின்ற வியாபார நோக்கில் அனைத்து படங்களும் தற்பொழுது வெளியாகி கொண்டிருக்கிறது.

உச்ச நடிகர்களும் தங்களுக்கு தேவையான சம்பளம் கிடைத்தால் போதும், என்கின்ற நிலைப்பாட்டில் இருப்பதால் அவர்களும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. இந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதத்தில் சர்தார் மற்றும் பிரின்ஸ் இரண்டு படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் படு மொக்கையாக அமைந்து படுதோல்வியை சந்தித்துள்ளது.

இருந்தாலும் பிரிண்ஸ் படம் திரைக்கு வருவதற்கு முன்பே ஓடிடி மற்றும் சேட்டிலைட் போன்ற விற்பனையினால் பெரும் லாபத்தை அதன் தயாரிப்பாளருக்கு பெற்றுத் தந்துள்ளது. கார்த்திக் நடிப்பில் வெளியான சர்தார் படம் படு கேவலமாக இருந்தாலும் கூட பிரின்ஸ் படத்துடன் ஒப்பிடும் போது சர்தார் படம் பரவாயில்லை பார்க்கலாம் என்பதால், மேலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் உருப்படியாக எந்த ஒரு படமும் தற்பொழுது வெளியாகவில்லை.

இதனால் சர்தார் வெற்றிக்கு காரணம் அந்த படம் நன்றாக இருக்கிறது என்பது அர்த்தம் அல்ல, வேறு எந்த ஒரு நல்ல படமும் வெளியாகவில்லை என்பதால் சர்தார் படத்தை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இதற்கு முன்பு வெளியான தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன், சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு போன்ற படங்களும் திரையரங்குகளில் வெளியாகி படுதோல்வியடைந்தது.

இருந்தாலும் இந்த படங்கள் வெளியாவதர்க்கு முன்பே. ஓடிடி மற்றும் சேட்டிலைட் போன்ற விற்பனையில் அந்த படம் பெரும் லாபத்தை அதன் தயாரிப்பாளருக்கு பெற்று தந்தது. இந்த நிலையில் வியாபார நோக்கில் தமிழ் சினிமாவை அழிவின் விளிம்பில் நிற்க வைத்துள்ள இந்த காலகட்டத்தில் கூட கன்னடா, தெலுங்கு சினிமாக்களில் வெளியாகும் படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியான கந்தாரா, கே ஜி எஃப் மற்றும் RRR போன்ற பிற மொழி படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் சினிமாவில் இது போன்று கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வியாபார நோக்கில் படம் எடுக்கப்பட்டு வரும் பட்சத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ் சினிமாவை ஆண்டவனால் கூட இனி காப்பற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.