தன்னுடைய மார்பகம் பற்றி விமர்சனம்… தரமான பதிலடி கொடுத்த சினிமாயி… என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

பின்னணி பாடகி சின்மயிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்ததாக திடீரென அறிவித்தார். சின்மயி கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஏதும் வெளிவராத நிலையில், திடீரென தனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என சின்மயி அறிவித்தது. இந்த குழந்தை வாடகை தாய் மூலம் தான் பிறந்திருக்கும் என விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனத்துக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், தான் கர்ப்பமாக இருந்து புகைப்படத்தை வெளியிட்டார் சின்மயி.

இதனை தொடர்ந்து தனது இரட்டை குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போன்று புகைப்படம் ஒன்றை சின்மயி வெளியிட்டிருந்தார். இது தவறான செயல் என்றும், புனிதமான ஒரு விஷயத்தை வெளிக்காட்டுவது ஒரு நல்ல தாய்மைக்கு அழகு அல்ல. இதுவும் ஒரு கலாச்சார சீர்கேடு என சமூக வலைதளத்தில் விமர்சனம் எழுந்தது. இதற்கு பதில் அளித்துள்ளார் சின்மயி தெரிவித்துள்ளதாவது.

“தாய்ப்பால் ஊட்டுவது புனிதமானது அதை வெளிச்சம் போட்டு காட்டக்கூடாது” என்ற ஆணாதிக்க கருத்து. கடவுள் மற்றும் விக்ரஹங்கள் புனிதம்னு தானே சொல்றாங்க? கடவுளையும் ஊர்வலம் கூட்டிட்டு தானே வற்றாங்க? தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் சாதாரணமான செயல். நாம எல்லாரும் கல்யாணவீட்டுல சாப்பிடும் போது உணவ மென்னும்பொழுதே, கொச கொசன்னு இருக்க வாய போக்கஸ் பண்ணி போட்டோ எடுப்பாங்க.

பெண்களோட மார்பகம் முற்றிலும் ஆண் பார்வைக்காக பாலுறவு செய்யபட்ட ஒன்று. ஆண்களின் மார்பகத்த அவங்க ஒர்க் அவுட் பண்றேன்னு show off பண்ணலாம், தப்பில்லையாம், உடல் பருமன் அதிகமாகி போடுற பனியன தாண்டி சதை தெரியும், லுங்கிய தூக்கி கட்டறேன், shorts போடறேன்னு ஆண்கள் எப்படி சுத்துனாலும் நாம எதுவும் சொல்றதில்ல. ஏன்னா ஆண்களின் உடை எப்படி இருந்தாலும், பெண்களால அவங்களுக்கு எந்த dangerம் இல்ல.

ஏஇதே மார்பகம் வீங்கியவாரு ஆண்களின் உடலில் தென்பட்டால் gynaecomastia அனக்கூரப்படுகிறது. அதற்க்கான சிகிச்சையும் எடுத்துக்கொள்கிறார்கள். சில நேரம் அறுவை சிகிச்சையும் எடுத்துக்கொள்கிறார்கள். உலகத்துல இருக்க பெண்பால் விலங்குகள் எல்லாத்துக்கும் பாலூட்டும்பொழுது மட்டுமே மார்பகம் வீங்கும். பாலூட்டுவது நின்ற உடன், மார்பகம் மருபடியும் பிளாட் ஆகிவிடும்.

பெண்களுக்கு மட்டும்தான் மாதவிடாய், அதாவது, மாதவிடாய் ஆரம்பிக்கும் நேரத்திலிருந்து மார்பகம் perennially enlarged நிலையில் இருக்கிறது. இதர்க்கான் காரணங்கள் என்னவென்று, evolutionary biologists ஆல இன்னும் சொல்ல முடியல. இந்த particular breast morphology, முதனிகளில் (Primates) unusual ஆனது. scientific ஆ ஒரு விடயம் புரியாத பொழுது, சகட்டுமேனிக்கு கலாசாரம் கோன்ஶ்ட்டைன்னு கெளம்பிடுவாங்க.