இஸ்லாமிய வெறியனே… அடிமையாய் இருக்கிற உனக்கே..! கொதிதெழுந்த தாமரை…. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல சினிமா திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை, தமிழ் சினிமாவில் பெண் படலாசிரியர்களில் முன்னனி பாடலாசிரியராக இருந்து வரும் தாமரை. தீவிர கடவுள் மறுப்பாளர், எந்த ஒரு அரசியல் கட்சி சார்பானவர் கிடையாது. சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றவர் அந்த வகையில் இவர் தெரிவிக்கும் கருத்து பல நேரம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும், இருந்தாலும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க கூடியவர் தாமரை.

இந்நிலையில் ஜமால் மைதீன் என்கிற நபர், சமூக வலைதளத்தில் கவிஞர் தாமரைக்கு எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு தான் மிக கட்டமாக பதிலளித்துள்ளார் தாமரை, ஜமால் மைதீன் எழுப்பிய கேள்வியாவது, பெண்ணுரிமை போராளி சங்கியே.. நீ ஏன் இன்னும் கர்நாடகா முஸ்லிம் பெண்ணுக்காக எழுதவில்லை என ஜமால் மைதீன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கவிஞர் தாமரை, நேற்று நான், ‘நதி’ எனும் படத்தில் எழுதியுள்ள பாடல் பற்றி பதிவிட்டிருந்தேன். நேரமின்மை காரணமாக அதையே சுருக்கமாகத்தான் எழுதியிருந்தேன்.

அந்தப் பதிவில் எல்லோரும் பாடலைப் பற்றிப் பேச, ‘ஜமால் மைதீன்’ என்னும் நபர் மட்டும், ‘ பெண்ணுரிமை முற்போக்கு சங்கியே, நீயேன் இன்னும் கர்நாடக முஸ்லிம் பெண்ணிற்காக எழுதவில்லை?’ என்று கேட்டிருக்கிறார். என் பதிவுக்கும் இவரது பின்னூட்டத்துக்கும் என்ன தொடர்பு ? முற்போக்குப் பெண்ணியவாதிகளெல்லாம் சங்கிகளா ? பச்சைச் சங்கிகள் என்னும் ஒரு வகையறா தமிழ்நாட்டில் (இந்தியாவிலும்தான்) கொடுக்கைத் தூக்க ஆரம்பித்து வெகுநாட்களாகி விட்டன.

ஊரே அறிந்த கடவுள் மறுப்பாளர், மதவெறுப்பாளர், சாதி எதிர்ப்பாளர் நான் ! திக.வினரைப் போல் போலி மதமறுப்பாளர் அல்லேன் – இந்து மதத்தை மட்டும் இகழ்ந்து விட்டு இஸ்லாமையும் கிறித்துவத்தையும் தூக்கிக் கொஞ்சுவதற்கு !. மதம் கூடாதென்றால் எந்த மதமும் கூடாது, கடவுள் இல்லை என்றால் எந்தக் கடவுளும் இல்லை, மதங்களின் மண்டையில் போட வேண்டுமென்றால் எல்லா மதங்களின் மண்டையிலும் போடவேண்டும் என்கிற நிலைப்பாடுடையவள்.

என்னைப் பார்த்து சங்கி என்கிறது ஒரு பச்சைச் சங்கி , என்ன பதில் சொல்லலாம் நண்பர்களே இந்த இஸ்லாமிய வெறியனுக்கு ???? கர்நாடக ஹிஜாப்பைப் பற்றி ஆதரவாக நான் பேசித்தான் என் முற்போக்கை இவருக்கு நிரூபிக்க வேண்டுமா ? ஓர் (இந்து) பெண்முற்போக்காளரைத் தரக்குறைவாகப் பேச உனக்கு எத்தனை கொழுப்பு இருக்க வேண்டும் ? இல்லாத கடவுளுக்கு அடிமையாய் இருக்கிற உனக்கே இத்தனை எகத்தாளம் என்றால், கடவுளே இல்லை என்று கர்ச்சிக்கும் எனக்கு எத்தனை திமிர் இருக்கும் ?

உன்னைப் போன்ற பச்சைச்சங்கிகளுக்கெல்லாம் அந்த காவிச் சங்கிகள்தாம் சரியான மாற்று ! அங்கே போய் உன் வீரத்தைக் காட்டு !. ஹிஜாப் குறித்துப் பேசுவதும் பேசாததும் என் விருப்பம். பச்சைச்சங்கிகள் போக்குக்கெல்லாம் ஆட முடியாது. இந்தப் பச்சைச்சங்கிகளைத் தோலுரித்துக் காட்டவே, இஸ்லாத்தின் அராசகத்தை எதிர்த்து அதை விட்டு வெளியேறிய ‘Ex Muslims’ இருக்கிறார்கள். இந்த விதயத்தில் அவர்கள் கருத்துக் கூறுவதுதான் சரியான முற்போக்கு, முன்னெடுப்பு !.என கவிஞர் தாமரை மிக கட்டமாக தெரிவித்துள்ளார்.