ஜெய்பீம் சமூகத்திற்கு கேடானது… உனக்கு தேசிய விருது கேட்குதா.? விளாசிய முக்கிய தயாரிப்பாளர்..

0
Follow on Google News

சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருது மிக பெரிய சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது, தமிழ் சினிமாவின் ‘கடைசி விவசாயி’ படத்துக்கு இரண்டு விருதுகள், ‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா’ பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருதும், கருவறை ஆவணப்படத்துக்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.

இருளர் இன மக்களின் வாழ்க்கையின் போராட்டம், அந்த மக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள், போலீஸ் காவலில் நிகழும் அத்துமீறல்கள் என விளிம்பு நிலை மக்களின் வலியை சொல்லும் வகையில் ஜெய்பீம் படம் பாராட்டுகளை பெற்று இருந்தாலும், குறிப்பிட்ட மற்ற சமூகத்தை தவறாக சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்து ஜெய் பீம் படத்திற்கு எதிராக சில தரப்பினரிடம் இருந்து கடும் எதிப்பு குரல் ஒலித்தது.

குறிப்பாக ஜெய்பீம் படத்தில் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்க கூடிய குறிப்பிட்ட ஒரு சமூகத்தை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்கின்ற குற்றச்சாட்டு எழுந்து, நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் படத்திற்கு எதிராக வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்க கூடிய சமூகத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனால் தனக்கு எதிராக வந்த எதிர்ப்புகளை சூர்யா பொருட்படுத்தாமல், ஜெய் பீம் படத்தில் இடம்பெற்ற அந்த சர்ச்சை கூறிய காட்சிகளில் எந்த தவறும் இல்லாதது போன்றும், தன் பக்கம் தான் நியாயம் உள்ளது, என்பதையும் வெளிப்படுத்தும் விதத்தில் அறிக்கை வெளியிட்டார். இது ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வட மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் மேலும் கோபத்தை ஏற்ப்படுத்தியது.

சூர்யாவை தங்கினால் பரிசு வழங்கப்படும் என்று, வன்னியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பகிரங்கமாக பேசினார். அதேபோன்று மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் அனல் அரசு, துப்பாக்கி ஏந்திய இரண்டு போலீசாரால் சூர்யாவை பாதுகாத்திட முடியாது, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வன்னிய மக்கள் ஓன்று சேர்ந்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா.? என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இப்படி பல பதட்டமான ஒரு சூழலை உருவாக்கும் வகையில் அமைத்தது சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம். தற்பொழுது தேசிய விருதுக்கு ஜெய்பீம் தேர்வு செய்யபடவில்லை என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒரு வகையில் ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டியிருந்தால், சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் வெளியான ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது எப்படி கொடுக்கலாம் என ஜெய்பீம் படம் வெளியான போது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் குரல் கொடுக்கலாம்.

அந்த வகையில் ஜெய் பீம் படத்திற்கு தேசிய கிடைக்காதது சரியான முடிவு தான் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் AM சௌத்ரி தேவர் ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து எழுந்து வரும் சர்ச்சைக்கு பதில் அளிக்கும் வகையில் ஜெய்பீம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கட்சியை வெளியிட்டுள்ளார் அதில்,

காவல்துறை அதிகாரி வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவரையும் நீ என்ன ஆளுக என கேட்கிறார் அதில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டும் ஒரு ஓரமாக நிற்க வைத்து விட்டு மற்ற சாதியினரை போக சொல்கிறார். அப்போது ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர் தன்னுடைய சாதியை குறிப்பிட்டு ஐயா என் மீது பொய் வழக்கு போட்டு விட்டார்கள் என போலீசாரிடம் தெரிவிக்க,

அதற்கு அந்த போலீசார் ஆமா இவர் பெரிய பிச்சவரம் ஜமீன் இவர் மீது பொய் வழக்கு போட்டு விட்டார்கள் போ அங்கிட்டு போய் ஓரமா நில்லு என அந்த போலீசார் பதில் அளிக்கிறார். இறுதியில் ஒரு ஓரமாக நிற்க வட்ட அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் மீது போலீசார் பபொய் வழக்கு பதிவு செய்து வண்டியில் ஏற்றுவது போன்று அந்த காட்சியை வெளியிட்ட AM சௌத்ரி தேவர்.

தேவர் வன்னியர் என்றால் காவல்துறை விட்டுவிடும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது காவல்துறை பொய் வழக்குகள் போடும் என்று காவல்துறை மீது சாதிய வன்ம சித்தரிப்பு காட்சி வைத்துவிட்டு உங்களுக்கு தேசிய விருது கேட்குதா? ஜெய்பீம் படம் சமூகத்திற்கு கேடானது என சினிமா தயாரிப்பாளர் AM சௌத்ரி தேவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.