பூணூல் மேல் கை வைத்தால் உங்களுக்கு என்னடா.? ரஜினி, கமல், அர்ஜுன், சங்கர், விசு என வெளுத்து வாங்கிய முக்கிய பிரபலம்..

0
Follow on Google News

முக்கிய பத்திரிகையாளர் ஒருவர் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் சங்கர் மற்றும் பாலச்சந்தர் இவர்களெல்லாம் முற்போக்கு சிந்தனைகளை ஆபத்து என சினிமாவில் விதைக்கின்றவர்கள், மனதில் உறுதி வேண்டும் படத்தில் ஒரு காட்சி வரும் அதைப் பார்ப்பவர்களுக்கு மதமாற்றம் இந்து மதத்தை சீரழிக்கும் என்று தோன்றும் வகையில் இருக்கும், அதே போன்று கிறிஸ்தவ மத மாற்றத்தை வைத்து படம் எடுத்தார்கள்.

இயக்குனர் விசு மற்றும் பாலச்சந்தர் விதைத்த விதைகள் அதிகம், தில்லு முல்லு படத்தில் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் வசனம் பேசுவார், அந்த வசனத்தை எழுதியவர் விசு, அதில் உங்க அப்பா என்ன எல்லாம் சொல்லித்தந்தார் என தேங்காய் சீனிவாசன் கேள்வி கேட்பார், அதற்கு ரஜினிகாந்த் எங்க அப்பா முதலில் நான் ஒரு இந்தியன், அதுக்கப்புறம் தான் தமிழன் என்று பேசுவார். இந்த வசனத்துக்கும் இன்டர்வியூ க்கும் என்ன சம்பந்தம்.

எதுக்கு ஒரு இன்டர்வியூக்கு போகின்றவன் நான் முதலில் இந்தியன், பிறகு தமிழன் என்று சொல்ல வேண்டும். அதேபோன்று எதற்கு மீசை வைத்திருக்கிறேன் என்று அடுத்த கேள்விக்கு, மாபொசி மற்றும் வ உ சி இவர்களெல்லாம் மீசை வைத்திருப்பார்கள் அதனால்தான் நானும் மீசை வைத்திருக்கின்றேன் என்பார் ரஜினி, இந்த இடத்தில் எதற்காக மாபொசியை திணிக்க வேண்டும், அப்ப மீசை என்றால் மாபொசி தான் உனக்கு ஞாபகம் வருது இதெல்லாம் அரசியல்.

அப்ப இதைப் பார்க்கின்ற ரஜினி ரசிகர்களுக்கு மாபொசி என்றால் ஒரு முக்கியமான ஆள் போல அப்படி என்று தோன்றும், அதுக்கப்புறம் நம்ம என்றைக்குமே இந்தியனா இருக்கணும் ரஜினிகாந்த் சொல்லிட்டாரு, அதுக்கப்புறம் தான் நம்ம தமிழனா இருக்கணும் என்று அவர்கள் மனதில் தோன்றும், இதுமாதிரி விதைகளை விதைத்து விடுறாங்க. ஜென்டில்மேன் படத்தில் பூணலை பிடிப்பது போல் ஒரு காட்சி வரும்,

அதுவரையும் அந்த படத்தின் கதாநாயகன் அர்ஜுன் அடி வாங்குவார், ஆனால் பூணலை பிடித்த உடனே கைய எடுடா அப்படின்னு அர்ஜுன் பேசிய வசனத்திற்கு தியேட்டரில் கைதட்டல். வன்னியரும், முதலியாரும்,தேவரும், கோனாரும் என மற்ற சாதியினரும் கைதட்டுகிறார்கள் திரையரங்கில். நமக்கு எதிரான அரசியலை நம்மளை வைத்து செய்ய வைத்தார்கள். இதையெல்லாம் உடைத்து இதுதான் சினிமா.

இதுதான் அரசியல் இதுதான் மொழி உணர்வு என்பதை சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என ஜீவ சகாப்பதம் பேசியுள்ளது பெரும் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில்,இதற்கு பதிலடி தரும் விதத்தில் இந்தியன் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்றும், மாபொசி பற்றி அறிந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை, மதமாற்றம் தவறு தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.