தமிழர்களை இழிவு படுத்துவது போன்ற சர்ச்சை பேச்சு… சாதுர்யமாக கையாண்ட மணிரத்தினம்…

0
Follow on Google News

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த சில நாட்களில் திரைக்கு வர இருப்பதால், அந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு வருகிறார்கள், அந்த வகையில் இந்தியா முழுவதும் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி அந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மணிரத்தினம், மிக சிறப்பாக பேசி அனைவருடைய கவனத்தை ஈர்த்து வருகிறார், ஹைதரபாத்தில் நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்து கொண்ட மணிரத்தினம் அங்கே தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியை புகழ்ந்து பேசியது அங்கே திரளாக இருந்த தெலுங்கு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.

மணிரத்தினம் பேசுகையில், பாகுபலி போன்ற ஒரு பிரமாண்டமான திரைப்படத்தை எடுத்து அதை மாபெரும் ஹிட் படமாக அமைந்த பின்பு தான் பல தயாரிப்பாளர்களும் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கும் தைரியம் வந்தது. அதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் எஸ்.எஸ். ராஜமௌலி, எனக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகத்தினரையும் சரித்திர படங்களை எடுக்க தைரியத்தை கொடுத்தது பாகுபலி தான் என பேசிய மணிரத்தினம்,

மேலும் சரித்திர கதைகளை படங்களாக கொண்டு வர திரைப்பட கலைஞர்களுக்கு வழிகாட்டியா பாகுபலி படம் அமைத்துள்ளது. எஸ்.எஸ். ராஜமௌலி பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கவில்லை என்றால் பொன்னியின் செல்வன் படமும் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்காது. அதற்காக நான் அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். பாகுபலி படம்தான் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க வழிவகுத்தது என மணிரத்தினம் ஹைதரபாத்தில் நடந்த நிகழ்வில் ராஜமௌலியை புகழந்து பேசியிருந்தார்.

இந்நிலையில் கடந்த முறை பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணிரத்தினம் மனைவி சுகாஷினி இம்முறை பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து விசாரித்ததில், கடந்த முறை பொன்னியின் செல்வன் படத்தின் ஆந்திராவில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சுஹாசினி பேசுகையில்,

பொன்னியின் செல்வன் படம் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எடுக்கப்பட்டுள்ளது என்று மலர்ந்த முகத்தில் மகிழ்ச்சியாகவும் , தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியில் வெறும் பத்து நாட்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது சலிப்பாக பேசிய சுஹாசினி, பொன்னியின் செல்வன் படம் உங்களுக்கான படம் என்றும், நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்று தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் பேசினார் சுகாசினி.

பொன்னியின் செல்வன் படத்தை பிற மொழியில் ஓட வைப்பதற்காக, அந்த மொழி பேசும் மக்களை கவர்வதற்காக, தமிழ்நாட்டை குறைத்து சுகாஷினி பேசியது, ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தும் செயல் என தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுஹாசினியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அந்த வகையில் சுஹாசினி கடந்த முறை பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பக்கத்தின் போது பேசிய பேச்சால், ஏற்பட்ட கடும் சர்ச்சையின் காரணமாக,சுஹாசினியால் கடந்த முறை ஏற்பட்ட பிரச்சனையை மனதில் வைத்து தான் இம்முறை தெலுங்கில் நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷன் நிகழ்வில் சுஹாசினியை கழட்டிவிட்டு விட்டு மணிரத்தினம் வந்து கலந்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.