இளையராஜா முகத்தை கூட பார்க்காத கங்கை அமரன்… அப்படி என்ன கோபம்..?

0
Follow on Google News

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். அவரது மறைவு இளையராஜா குடும்பத்தினரையும் திரையுலக பிரபலங்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் கடந்த கலங்களில் இளையராஜா இசையமைக்கும் போது கவிஞர்கள் திடீரென்று வரவில்லை என்றால் கங்கை அமரனை பாடல் எழுத சொல்லி இருக்கிறார் இளையராஜா.

அப்படி கங்கை அமரன் எழுதிய பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் கங்கை அமரன் ஒரு பாடல் ஆசிரியராக, இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் கரகாட்டக்காரன், கோவில் காளை போன்ற படங்களை இயக்கி ஒரு இயக்குனராகவும் புகழ் பெற்றவர் கங்கை அமரன் வளர்ச்சி மீது இளையராஜாவுக்கு ஒரு வித பொறாமை இருந்தது என்றும் அது தான் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிவதற்காக காரணமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் கங்கை அமரன் ஏன் பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை வரவில்லை என்பது பற்றி பகிர் தகவல்களை வெளியிட்டுள்ளார். பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது அவரது உறவினர்களும், திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தனர். ஏராளமானோர் பவதாரணியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினாலும் அவரது சித்தப்பாவான கங்கை அமரன் நேரில் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் பவதாரணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்காதது தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக, இளையராஜா உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தான் கங்கை அமரன் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பல்வேறு விஷயங்களை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பயில்வான் பேசுகையில், “இளையராஜாவை விட கங்கை அமரனுக்கு தான் இசையமைப்பதில் ஞானம் அதிகம். அந்த காலகட்டத்தில் கங்கை அமரன் இசை அமைத்த பல பாடல்களுக்கு இளையராஜா தனது பெயரை போட்டுக் கொண்டார். இளையராஜா எல்லோரிடமும் பிரச்சனை செய்வார். பிரபல இயக்குனர்கள் ஆன பாலச்சந்தர் மணிரத்தினம் ஆகியோருடனும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனாலேயே அவர்கள் ஏ ஆர் ரகுமானை அறிமுகப்படுத்தினார்கள். அதேபோல் வைரமுத்து உடன் தகராறு ஏற்பட்டபோது தம்பி கங்கை அமரன் இளையராஜாவுக்கு துணையாக இருந்திருக்கிறார். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு எப்போதும் அண்ணனுக்கு உறுதுணையாக இருந்து வந்த கங்கை அமரனை பார்த்து “வெளியே போடா நாயே” என்று இளையராஜா அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

அதன் பிறகு, சில காலம் பேசிக் கொள்ளாமல் இருந்து வந்த இருவரும் சமாதானம் ஆகி விட்டனர். இருப்பினும் கங்கை அமரனுக்கு “அண்ணனுக்கு எவ்வளவு உதவி செய்தோம் அனைத்தையும் மறந்து விட்டாரே ” என்ற வருத்தம் மனதில் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. அதனாலையே இனி அண்ணன் முகத்தில் விழிக்க கூடாது என்று கங்கை அமரன் முடிவு செய்து விட்டதாகவும், அதனால் கூட பவதாரணி மறைவுக்கு கூட நேரில் வரவில்லை என்றும் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.