தமிழ் மொழிக்கே இளையராஜா இரண்டகம் செய்து விட்டாராம்.. பிரபல இசை அமைப்பாளர் வெளியிட்ட பரபரப்பு..

0
Follow on Google News

இந்திய சினிமாவே கொண்டாட கூடிய நபராக திகழ்ந்து வரக்கூடியவர் இசைஞானி இளையராஜா, அவர் மீது மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கூட அவருடை இசை மீது இதுவரை யாரும் விமர்சனம் வைத்ததில், மேலும் அவரை விமர்சனம் செய்கின்றவர்கள் கூட அவரின் இசைக்கு நாங்கள் ரசிகர்கள் என்று குறிப்பிட்டு அவருடைய இசையை பாராட்ட தவறுவதில்லை, இந்நிலையில் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான ஜேம்ஸ் வசந்தன்.

பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வரக்கூடியவர். கடத்த சில வருடங்களாகவே தொடர்ந்து இளையராஜாவை சீண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி வருகின்றவர், அந்த வகையில் SPB மரணத்தின் போது கூட இளையராஜாவை விமர்சனம் செய்த ஜேம்ஸ் வசந்தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் இளையராஜாவை ஒருமையில் பேசிஇருந்தார், தற்பொழுது அவர் இசை மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.

ஜேம்ஸ் வசந்த தெரிவிக்கையில், நேற்றுதான் இந்தப் பாடல் வரியைப் பார்த்தேன், அதிர்ச்சியுற்றேன். எப்படி இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இந்தப் பிழையை அனுமதித்தார் என்று! “என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்”, இத்தனை நாளும் அது “… பல மின்னல் ஏழும் …” என்றே நினைத்திருந்தேன். ஒன்று, அந்தக் குறில் அந்த சந்தத்துக்கு வராது என்று சொல்லி கவிஞரை அந்தச் சொல்லை மாற்ற வைத்திருக்க வேண்டும்.

அல்லது, அது நன்றாக இருக்கிறதாய் நினைக்கும் பட்சத்தில் அதை குறிலாகப் பாடவைத்திருக்க வேண்டும் பாடகரை. சில இடங்களில் சில ஒப்புரவுகள் செய்வது தவிர்க்க இயலாதுதான் என்றாலும், இவ்வளவு அப்பட்டமான சிதைவை நியாயப்படுத்தவே முடியாது. இது மொழிக்குச் செய்த இரண்டகம். சிலர் விளக்கச் சொல்லி கேட்பதால் அதையும் இங்கேயே சேர்த்து விடுகிறேன்.

இந்த சந்தம் – தன்னன்னா தன்னன்னா – தன தன்னன் னானன் னானா. இரண்டாவது வரியின் இரண்டாவது சீர் “னானன்..” ‘னா’ என்கிற நெடிலுடன் தொடங்குகிறது. அதற்கு எழுதப்பட்டிருக்கிற ‘எழும்’ என்பது குறிலுடன் தொடங்குகிறது. அதை இந்தப் பாடலில் பாடியிருப்பது போல சமத்தில் பாடினால் நெடிலாக மட்டுமே பாட இயலும். அதைச் சரிசெய்ய விழைந்தால், சமம் தள்ளிப் பாடினால் குறிலாக ஒலிக்கை வைக்க இயலும்.

இங்கே பிழையாக எழுதப்பட்டு, பிழையாகவே பாடப்பட்டிருக்கிறது என்பதுதான் செய்தி. குறில்-நெடில் என்பவையே மொழியின் அடிப்படை. கவிஞர்கள் சந்தத்துக்கு பாடல் எழுதும்போது இதுதான் அவர்களது மிகப்பெரிய சவால். எல்லா நல்ல கவிஞரும் பிழையின்றி எழுதுபவர்தான் என ஜேம்ஸ் வசந்தன் இளையராஜா இசையில் வள்ளி படத்தில் இடம்பெற்றுள்ள என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் பாடலை சுட்டி காட்டி.

எல்லா கவிஞரும் பிழையின்றி எழுதுபவர் தான் என கவிஞர் மீது தவறில்லை என்பதை மறைமுகமாக சுட்டி கட்டியுள்ள ஜேம்ஸ் வசந்தன். மேலும் அந்தக் குறில் அந்த சந்தத்துக்கு வராது என்று சொல்லி கவிஞரை அந்தச் சொல்லை மாற்ற வைத்திருக்க வேண்டும். அல்லது, அது நன்றாக இருக்கிறதாய் நினைக்கும் பட்சத்தில் அதை குறிலாகப் பாடவைத்திருக்க வேண்டும் பாடகரை. என அந்த பாடலின் இசை அமைப்பாளர் இளையராஜா தவறு செய்துவிட்டதாக குற்றம் சட்டியுள்ள ஜேம்ஸ் வசந்தன்.

மேலும் இவ்வளவு அப்பட்டமான சிதைவை நியாயப்படுத்தவே முடியாது. இது மொழிக்குச் செய்த இரண்டகம் என இளையராஜா தமிழ் மொழிக்கு இரண்டகம் செய்துவிட்டார் என இளையராஜா இசையில் வெளியான ஒரு படத்தில் உள்ள ஒரு எழுத்தை வைத்து மீண்டும் இளையராஜாவை சீண்டும் வகையில் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளது, மேலும் மொழிக்கே இளையராஜா இரண்டகம் செய்துவிட்டார் என்றெல்லாம் ஜேம்ஸ் வசந்தன் பேசியதற்கு கடுமையான பதிலடியை இளையராஜா ரசிகர்கள் கொடுத்து வருவதும் குறிப்பிடதக்கது.