காப்பி அடிப்பதில் அட்லீ பார்முலாவை கையில் எடுத்த பா.ரஞ்சித்… இது அதுல…

0
Follow on Google News

கே ஜி எஃப் திரைப்படத்தில் கோலார் தங்க வயலில் தங்கத்தை எடுத்த பின்பு அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள அடிமைகள் பற்றிய கதையாக இருந்தது. கிட்டத்தட்ட கதையின் கரு கேஜிஎப் போன்றே தங்கலான் இருந்தாலும் கூட முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தங்கலான் படம் படமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் விக்ரம் பிறந்த நாள் அன்று தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தங்கலான் படம் குறித்த கதை என்ன என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. கோலார் தங்க வயலில் தங்கம் இருப்பதை வெள்ளைக்காரன் கண்டுபிடித்து விடுகிறான். இந்த தங்கத்தை தோண்டுவதற்கு ஆட்கள் வேண்டும் என்பதற்காக குறிப்பாக கோலார் தங்க வயலில் ஒட்டி உள்ள தமிழ்நாட்டில் இருந்து ஆட்களை அழைத்து செல்கிறான்.

தமிழ்நாட்டில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர் போன்ற இடங்களில் உள்ள விளிம்பு நிலை மக்களை கோலார் தங்க வயலுக்கு தங்கத்தை தோண்டி எடுக்க அழைத்து செல்கிறான். அங்கே வேலைக்கு அழைத்து சென்ற மக்களை அடிமைகளாக வைத்து கொண்டு, அவர்களிடம் மிக கொடூரமாக வேலை வாங்கி தங்கத்தை தோண்டி எடுக்க வைக்கிறான் வெள்ளைகாரன். அந்த அடிமைகள் கூட்டத்தில் ஒருவன் வீறு கொண்டு எழுகிறான்.

கொத்தடிமைகளாக வேலை செய்யும் மக்களிடம் புரட்சி பேசி மக்களை விழிப்புணர்வை ஏற்படுத்தி வீறு கொண்டு எழுந்தவன் ஒரு போராளியாக உருவெடுக்கிறான், அதன் பின்பு வெள்ளையர்களுக்கும் அங்கே அடிமையாக வேலை பார்த்து வருகின்றவர்களுக்கும் பிரச்சனையாக உருவெடுத்து. அது கலவரமாக வெடிக்கிறது. இந்த கலவரத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் சில உயிர்களும் பலியாகின்றனர்.

இதன் பின்பு இந்த பிரச்சனை மிகப் பெரிய அளவில் உருவெடுத்த பின்பு அடிமையாக வேலை வாங்கிய வெள்ளைக்காரனே புதிய தொழிலாளர் சட்டத்தை கொண்டு வருகிறான், அதில் எட்டு மணி நேரம் வேலை, அதற்கு ஏற்றார் போல் சம்பளம், அவர்களுக்கு தேவையான சலுகை என வெள்ளைக்காரன் தொழிலாளர் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது கோலார் தங்கவயலில் நடந்த புரட்சி.

இதன் அடிப்படையில் தான் தங்கலான் படத்தின் கதை நகர்கிறது என கூறப்படுகிறது, இந்த படத்தை தத்ரூபமாக எடுக்க வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை வேலூர் போன்ற மாவட்டங்களில் எடுப்பதற்கு பா ரஞ்சித் முயற்சி செய்துள்ளார், ஆனால் அனுமதி கிடைக்காததால் வேறு ஒரு இடங்களில் எடுத்துள்ளார்.

மேலும் கே ஜி எஃப் படம் படமாக்கப்பட்ட அதே இடங்களிலும் தங்கலான் படம் படமாக்கப்பட்டுள்ளது சுமார் 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து உள்ள நிலையில் இன்னும் 30 சதவீதங்கள் பாக்கி உள்ள தங்கலான் திரைப்படதின் கதை இதற்கு முன்பு பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தின் கதையின் சாயலில் இருக்கும் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. பரதேசி படத்தில் தேயிலை தோட்டத்தில் விளிம்பு நிலை மக்களை அழைத்து சென்று அடிமைகளாக வேலை வாங்குவார்கள் வெள்ளை காரர்கள்.

ஆனால் தங்கலான் படத்தில் தேயிலை தோட்டத்திற்கு பதில் கோலார் தங்க வயல், பரதேசி படத்தில் புரட்சி வெடிக்காது, தங்கலான் படத்தில் புரட்சி வெடிக்கிறது இது தான் இந்த இரன்டு படங்களுக்கு இடையில் உள்ள விதியசம் என்றும், மேலும் தங்கலான் திரைப்படம் வெளியான பின்பு பரதேசி மற்றும் கேஜிஎப் இரண்டும் கலந்த கலவையாக கதை இருக்கலாம், இருந்தாலும் காட்சிகள் முற்றிலும் புதியதாக பா.ரஞ்சித் படமாக்க பட்டிருப்பார். மேலும் நடிகர் விக்ரம் நடிப்பு மிக பெரிய அளவில் பேசப்பட்டு தனக்கான இடத்தை பிடிப்பார் என்பதில் சமீபத்தில் வெளியான தங்கலான் டீசர் உறுதி படுத்தியுள்ளது.