கல்கியின் குடுப்பதிற்கு விபூதி அடிக்க பார்த்த மணிரத்தினம்.. நீதிமன்றம் சென்றது மணிரத்தினம் விவகாரம்..

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், மிகப் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக வசூலை வாரி குவித்து இமாலய வெற்றி பெற்றது. பொன்னியின் செல்வன் படத்தின் கதை அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் கதைக்கு சொந்தமான அமரர் கல்கிக்கு உரிய மரியாதையை மணிரத்தினம் தரவில்லை, அவருடைய கதையை கூட மூலக்கதை என்றுதான் பொன்னியின் செல்வன் படம் முடியும் பொழுது குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் படம் திரையில் ஆரம்பிக்கும் பொழுது கல்கியின் புகைப்படத்தை வைத்து மலர் தூவி இந்த படம் தொடங்கியிருக்க வேண்டும் என கல்கியின் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

மேலும் பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழா, ட்ரைலர் வெளியீட்டு விழா, டீசர் வெளியீட்டு விழா போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கல்கியின் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்திய பின்பு அந்த நிகழ்ச்சியை தொடங்கி இருக்க வேண்டும், ஆனால் தொடர்ந்து பொன்னியின் செல்வன் கதைக்கு சொந்தமான கல்கி புறக்கணிக்கப்பட்டு வந்தார் என்கிற குற்றச்சாட்டும் நிலவியது.

இந்நிலையில் பொன்னியின் படம் முடிவில் மூலக்கதை கல்கி என்று குறிப்பிட்டது பின்னணியில், தமிழக அரசு கல்கியின் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புத்தகத்தை மட்டும் தன நாட்டுடைமையாக்கி உள்ளது. ஆகையால் அந்தப் புத்தகத்தை யார் வேண்டுமானாலும் அச்சிட்டு விற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தொலைக்காட்சி தொடர், வெப் சீரியஸ் அல்லது சினிமாவாக எடுத்தால் நிச்சயமாக கல்கியின் குடும்பத்திற்கு அந்தக் கதைக்கான காப்பீட்டுத் தொகை கொடுக்க வேண்டும்.

அப்படி கல்கியின் குடும்பத்திற்கு பணம் கொடுக்கக் கூடாது என்பதற்காக தான் படம் முடியும் தருவாயில் மூலக்கதை கல்கி என்று குறிப்பிட்டுள்ளார் மணிரத்தினம் என்கிற சர்ச்சை மிக பெரிய அளவில் வெடித்தது. இப்படி பெரும் சர்ச்சைக்கு பின்பு கல்கியின் குடும்பத்தை கௌரவ படுத்திய மணிரத்தினம், பின்பு கல்கி அறக்கட்டளைக்கு ஒரு தொகையும் வழங்கினார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை திரித்து மணிரத்தினம் எடுத்துள்ளதாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

கல்கியின் பொன்னியின் செல்வன் படம் வரலாற்றை திரித்து இயக்கப்பட்டுள்ளது. வந்தியத்தேவன் பெயரைத் தவறாக பயன்படுத்தியதுடன், தனது சுய லாபத்திற்காக வரலாற்றை தவறாக பயன்படுத்தியுள்ளா மணிரத்தினம். வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கியும் பயன்படுத்தி உள்ள நிலையில், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குநர் மணிரத்னம் வரலாற்றை திரித்துக் கூறியுள்ளார் என நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.