பிக் பாஸ் வின்னர் மாயா தான்… அதில் உறுதியாக இருக்கும் கமல்ஹாசன்… எல்லாமே செட் அப் தான் மக்களே…

0
Follow on Google News

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு பைனல் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. 85 நாட்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் சுவாரஸ்யமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒருபக்கம் சண்டை மறுபக்கம் சர்ச்சை என இந்த சீசன் விறுவிறுப்பாக செல்கின்றது. இந்த சீசனில் மாயா மற்றும் பூர்ணிமா மீது தான் அதிகப்படியான விமர்சனங்கள் இருந்து வருகின்றன

குறிப்பாக மாயா ரசிகர்களின் வெறுப்பை அதிகளவில் சம்பாதித்து வருகின்றார் என்றுதான் சொல்லவேண்டும். பிரதீப் ஆண்டனி வெளியே செல்ல மாயா தான் மிக முக்கிய காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் அவர் செய்யும் செயல்கள் கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகின்றது. இதனால் ரசிகர்கள் பலர் மாயா நாமினேட் ஆகவேண்டும் என ஆவலாக காத்துகொண்டு இருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்த விஷயம் தற்போது நடந்துள்ளது. இதுவரை ஒரே ஒருமுறை நாமினேட் ஆன மாயா தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நாமினேட் ஆகியுள்ளார். எனவே மாயா இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரம் கடந்த முறை மாயா நாமினேட் ஆன போதே எவிட் ஆக வேண்டியது. ஆனால் பிக் பாஸ் மற்றும் கமல் அந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று கூடி மாயாவை காப்பாற்றிவிட்டனர்.

மாயா என்ன செய்தாலும் விஜய் டிவியும் கமலஹாசனும் அவரை காப்பாற்றி வருகிறது என பிக் பாஸ் ஆடியன்ஸ்கள் புலம்பி வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் யார் இருக்க வேண்டும், யார் வெளியேற வேண்டும் என்பதை முடிவு செய்வதே மாயா தான். ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளரை குறி வைத்து, அவர்களை திசை திருப்பி தவறாக சித்தரித்து வெளியேற்றி வருகிறார் மாயா.

இதில் சிக்கியவர்கள் தான் பிரதீப், ஐஷு போன்றவர்கள். சரவண விக்ரம் வெளியேறிய நிலையில் மாயா மீண்டும் தன்னுடைய வேலையை ஆரம்பித்திருக்கிறார். பெரும்பாலும் கடந்த சில வாரங்களாக மாயா நாமினேஷனில் சிக்கிக் கொள்வது இல்லை. இதற்கு முக்கிய காரணம் அவர் வீட்டில் இருப்பவர்களை அந்த அளவுக்கு மூளை சலவை செய்வதுதான்.

அதே நேரம் மாயா என்ன தவறு செய்தாலும் கமல்ஹாசன் அவரை திட்டுவதே இல்லை. இது ஓருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் தினேஷ், விஷ்ணு, விஜய் வர்மா, மணி, ரவீனா, மாயா, நிக்சன் என்று பலர் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இதில் ரவீனா, நிக்சன், மாயா ஆகிய மூவரில் யாராவது வெளியேற வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் விருப்பம். ஆனால், கண்டிப்பாக மாயா குறைவான வாக்குகள் பெற்றாலும் அவரை பிக் பாஸ் குழு வெளியில் அனுப்பமாட்டார்கள் என கூறப்படுகிறது.

மாயாவிடம் கமல்ஹாசன் கரிசனம் காட்டுகிறார். அவர் மிகவும் தன்மையாக நடந்து கொள்கிறார். கோபம் அடைவது இல்லை என்று விமர்சனம் உள்ளன. மாயாவிடம் மட்டும் கமல்ஹாசன் பாரபட்சம் காட்டுவதாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின் முக்கியமான காரணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது . அதன்படி கமல்ஹாசனின் விக்ரம் 2ல் அவர் நடிக்க உள்ளார். விக்ரம் 1ல் வந்துவிட்டு சென்றாலும் விக்ரம் 2ல் அவர் கமல் டீமில் நடிக்க உள்ளார்.

அதேபோல் எல்சியூவில் உள்ளார் . அப்படி இருக்க அவரிடம் மிக மோசமாக நடந்துகொள்வது சரியாக இருக்காது. அவரை கடுமையாக பேசுவது சரியாக இருக்காது. அதோடு படத்திலும் கமலுடன் மாயா சகஜம் ஆகிவிட்டார். இதுதான் கமல் மாயாவை கண்டிக்காமல் மேம்போக்காக விட காரணமாக இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள், மேலும் பிக் பாஸ் வின்னர் மாயா தான் என கப்பை மாயாவுக்கு கமல்ஹாசன் கொடுத்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை, ஏனென்றால் மாயா தான் டைட்டில் வின்னர் என கமல்ஹாசன் ஏற்கனவே முடிவு செய்திருக்கலாம் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..