பணம் கொடுத்து டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்ற அர்ச்சனா… எல்லாமே தில்லாங்கடி வேலை தானா.?

0
Follow on Google News

கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த பிக் பாஸ் தமிழ் – சீசன் 7 நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே நிகழ்ச்சிக்கு உள்ளே சக போட்டியாளர்களாலும் சமூக வலைதளங்களிலும் எதிர்பார்க்கப்பட்டது போன்றே போட்டியின் நடுவில் ‘வைல்ட் கார்ட்’ என்ட்ரியாக உள்ளே நுழைந்த தொகுப்பாளினி அர்ச்சனா ‘பிக் பாஸ்’ பட்டத்தை வென்றார்.

வெற்றியாளருக்கான கோப்பையை நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் வழங்கினார். ’வைல்ட் கார்ட்’ என்ட்ரியில் உள்ளே வந்த போட்டியாளர் ஒருவர் தமிழ் பிக் பாஸ் சீசனில் கோப்பையை வெல்வது இதுவே முதன்முறை. போட்டியில் வென்ற அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதுதவிர, 15 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை மற்றும் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

‘வைல்ட் கார்ட்’ போட்டியாளர் அர்ச்சனா, முதல் வாரத்தில் பெரும்பாலும் அழுதுகொண்டே இருப்பதாக, மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் கேலி செய்ததால், தன்னை சக போட்டியாளர்கள் ‘புல்லி’ செய்வதாக அர்ச்சனா குற்றச்சாட்டு முன்வைத்தார். இதனால், மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் அடங்கிய குழுவுக்கு ‘புல்லி கேங்க்’ என்ற பெயரே சமூக ஊடகங்களில் வைரலானது. அர்ச்சனாவுக்கு ஆதரவாக விசித்ரா துணைநின்றார்.

இருப்பினும் மாயா, பூர்ணிமாவை எதிர்த்து, தொடர்ந்து இவருடைய செயல் ரசிகர்களை கவர துவங்கிய நிலையில், அதிக வாக்குகளை பெற்று பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். ஆரம்பத்தில் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப்புக்கு ஆதரவாக பேசினார் அர்ச்சனா. பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோருக்கு எதிராக தொடர்ந்து பேசினார். வார இறுதியில் மாயா, பூர்ணிமா தரப்புக்கு கமலிடமிருந்து விமர்சனங்கள் வர, மறுபுறம் அர்ச்சனாவுக்கு ஆதரவு எழுந்தது. ஆனால், ஒருகட்டத்தில் அர்ச்சனாவின் நடவடிக்கைகளையும் கமல் விமர்சித்தார். இருப்பினும் அவருக்கான ஆதரவு தொடர்ந்து வந்தது.

அர்ச்சனாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். விஜே அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க ஒரு நாளுக்கு ரூ. 20 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி 28வது நாளில் வைல்டு கார்டு எண்ட்ரியாக தான் விஜே அர்ச்சனா உள்ளே வந்தார். அதன்படி 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

பரிசு தொகை ரூ. 50 லட்சம், பிளாட் மற்றும் கார் மதிப்பு ரூ. 30 லட்சம், சம்பளம் ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் என ஆக மொத்தம் ரூ. 95 லட்சத்தை தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார் அர்ச்சனா. அதே நேரம் அவருக்கு டைட்டிலை வெல்லும் தகுதி இல்லை. இது அநியாயமான வெற்றி. பக்கா பி.ஆர். டீம் இருந்தால் டைட்டிலை வெல்லலாம். பிக் பாஸ் என்பது கேம் ஷோ இல்லை வியாபாரம் என நிரூபித்துவிட்டார் அர்ச்சனா என அவரை பலரும் சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள்.

ஒவ்வொரு சீசனிலும் சில போட்டியாளர்கள் இந்த மாதிரி பி.ஆர்.டிமை வைத்து தான் நிகழ்ச்சியில் நீடித்திருந்தார்கள். அந்த வகையில் இந்த சீசனில் அர்ச்சனா பக்கா பிளானுடன் வந்துள்ளார். அர்ச்சனாவுக்காக சீனியர் சினிமா நடிகர் ஒருவருடைய மகள்தான் இந்த வேலையை செய்ததாக கூறப்படுகிறது. காரணம் இந்த வேலைகளை செய்தால் லட்சக்கணக்காக வருமானம் கிடைக்கிறதாம்.

தற்போது அர்ச்சனா குறித்து ஓர் சர்ச்சை எழுந்து வருகிறது. அதாவது பிக் பாஸ் வீட்டில் கிடைத்த ரூ. 15 லட்சத்துக்கு 40 ஆயிரம் கிடைத்ததை அதை அப்படியே பி ஆர் ஏஜென்சிக்கு சம்பளமாக கொடுத்து விட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றனர். மறுபக்கம் ஒரு பெண் பிக் பாஸ் டைட்டிலை வென்றிருக்கிறார் என பெருமை கொள்ளாமல் தற்போது வரை அவர் மீது பி.ஆர் என்ற குற்றச்சாட்டை வன்மத்துடன் கக்குகிறார்கள், என்று அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.