கடைசி வரை போராடி மகள் பாவதாரணி காப்பாற்ற முடியலையே… மனம் உடைந்த இளையராஜா…

0
Follow on Google News

இசைஞானி இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரண்டு மகன்களும் பவதாரணி என்கிற ஒரு மகளும் உண்டு. இதில் இரண்டு மகன்களிடம் கராராக நடந்து கொள்ளும் இளையராஜ, மகள் பவதாரணி மட்டும் அவருக்கு செல்ல பிள்ளை. சிறு வயதிலேயே தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் இசை குறித்த நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்த இளையராஜா, மகளுக்கு பெரிதாக சொல்லித் தரவில்லை.

இருந்தாலும் பவதாரணிக்கு இசை மீது இருந்த ஆர்வத்தினால் தந்தையிடம் இசையை கேட்டு கற்றுக்கொண்டு வந்துள்ளார் பவதாரணி. சிறுவயதில் இருக்கும்போதே மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படத்தில் குழந்தை குரலில் பாடல் ஒன்றை பாடி அறிமுகமான பவதாரணி. பாரதி படத்தில் பாடிய ஒரு பாடல் மூலம் தேசிய விருதும் பெற்றார்.

பரபல பத்திரிக்கையாளர் மகனை பவதாரணி காதலித்து வந்தவர், இந்த காதலை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து சம்மதமும் பெற்ற பெற்றார். பவதாரணி காதலுக்கு இளையராஜா எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, தன்னுடைய மகளின் மகிழ்ச்சி தான் என்னுடைய மகிழ்ச்சி என பவதாரணி காதலுக்கு பச்சைக்கொடி காட்டி திருமணத்தையும் நடத்தி வைத்தார் இளையராஜா.

திருமணம் முடிந்து குழந்தை இல்லாமல் இருந்த பவதாரணிக்கும் அவருடைய கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து, அதாவது ஒருவரின் மனைவியாக வாழ்வதை விட இளையராஜா மகளாகவே வாழ முடிவு செய்தார் பவதாரணி. இது குறித்து தன்னுடைய தந்தை இளையராஜாவிடம் பவதாரணி ஆலோசித்த போது, உன்னுடைய மகிழ்ச்சி தான் எங்களுக்கு முக்கியம் என அவர் கணவரை விட்டு பிரியும் முடிவுக்கும் இளையராஜா பச்சைக்கொடி காட்டினார்.

அதன் பின்பு தொடர்ந்து இளையராஜா மகளாவேகவே இளையராஜா வீட்டில் வாழ்ந்து வந்தார் பவதாரணி. இந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு பவதாரணிக்கு பித்த பை பிரச்சனைக்காக சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு புற்றுநோய் பரவல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அது சிறுநீரகம் வரை பாதிப்பு உண்டாகும் வகையில் பரவியுள்ளது.

தன்னுடைய மகளை எப்படியாவது புற்றுநோயிலிருந்து காப்பாற்றி விட வேண்டும் என இளையராஜா மருத்துவரிடம் ஆலோசனை செய்துள்ளார்.ஆனால் மருத்துவர்களும் ரொம்ப கஷ்டம் என தெரிவிக்க, எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை வெளிநாட்டில் இதற்கு சிகிச்சை இருக்கிறதா.? என மிக பெரிய மருத்துவர்களிடம் இளையராஜா மகள் பவதாரணியை காப்பாற்ற போராடி இருக்கிறார்.

ஆனால் மருத்துவர்கள் புற்றுநோய் பவதாரணிக்கு மிகப்பெரிய அளவில் பரவி விட்டது இனி காப்பாற்றுவது கடினம் என தெரிவித்து விட்டார்கள். இருந்தும் இலங்கையில் புற்று நோய்க்காக ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வருவதை அறிந்து, அங்கே தன்னுடைய மகளை புற்றுநோயிலிருந்து காப்பாற்றி விடலாம் என்று கடந்த சில தினங்களாகவே இலங்கையில் மகளை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார் இளையராஜா.

இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் இலங்கையில் இளையராஜா இசை கச்சேரி நிகழ்வு ஏற்பாடு விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், அந்த நிகழ்வில் கலந்து கொள்ள இளையராஜா இலங்கை சென்றிருந்தார். அப்போது இலங்கையில் ஆயுர்வேதிக் சிகிச்சை பெற்று வந்த மகள் பவதாரணி மரணம் அடைந்த செய்தி கேட்டு துடிதுடித்துப் போன இளையராஜா சோகத்தில் மீண்டு வர பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.