50 கோடி பேசியும் முடியாது என மறுத்த விக்ரம்… ரஜினி விருப்பப்படும் முடியாது என மறுப்பு..

0
Follow on Google News

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டும் சிவகார்த்திகேயன் வந்து போகும் காட்சிகள் இடம்பெற்றால் ரஜினி சார் படத்தில் நானும் நடித்தேன் என்கிற பெருமை எனக்கு கிடைக்கும் என சிவகார்த்திகேயன் நண்பரான இயக்குனர் நெல்சனிடம் தன்னுடைய விருப்பத்தை வெளிப்டுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.

மேலும் அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் எனக்கு ஜெயிலர் படத்தில் நடிக்க சம்பளம் கூட வேண்டாம் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நண்பன் ஆசையை நிறைவேற்ற ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் இடம் பெரும் வகையில் திரைக்கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி அதை ரஜினியிடம் தெரிவித்துள்ளார் நெல்சன். இதற்கு ஆரம்பத்தில் வேண்டாம் மறுத்துள்ளார் ரஜினிகாந்த்,

இதே போன்று ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அந்த படத்தில் சில காட்சிகள் மட்டுமே கெஸ்ட் ரோல் போன்று நடிக்கும் வாய்ப்பை அந்த படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் கேட்டுள்ளார். இது குறித்துஇயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் ரஜினிகாந்திடம் பேசியபோது, அதற்கு ரஜினிகாந்த் சினிமா வேறு குடும்பம் வேறு என மருமகனுக்கே அந்த வாய்ப்பை ரஜினிகாந்த் கொடுக்கவில்லை.

இதற்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த் தன்னுடைய படம் ரஜினிகாந்த் படமாகவே இருக்க வேண்டும் , மற்றொரு முன்னணி நடிகர் என்னுடைய படத்தில் இடம்பெறும் போது, அது அந்த நடிகரின் படமாக இருந்து விட கூடாது என்பதில் மிக்வும் கவனமாக இருந்து வர கூடியவர் ரஜினிகாந்த், அந்த வகையில் சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் எந்த ஒரு நடிகரையும் தன்னுடைய படத்தில் ரஜினிகாந்த் அனுமதிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது உள்ள சினிமா பல மாற்றங்களை கண்டுள்ளது. பொதுவாக ஒரு முன்னணி நடிகர் நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக மற்றொரு முன்னணி நடிகர் நடிக்கும் போது அந்த படத்திற்கான வியாபாரம் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அப்படித்தான் தொடர்ந்து தமிழ் சினிமா தொடர்ந்து பல தோல்வி படங்களை சந்தித்து கொண்டிருக்க அதே நேரத்தில் மற்ற மொழி படங்களான கேஜிஎப், RRR போன்ற படங்கள் தமிழகத்தில் வெற்றி பெற்று கொண்டிருந்த காலகட்டத்தில்,

தமிழ் சினிமாவை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்ற படம் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம். இந்த படத்தில் கமலஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து இருப்பார், மேலும் கிளைமேக்ஸ் கட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார், இப்படி பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இடம்பெற்றது விக்ரம் படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷனாக அமைந்தது, அதுவே அந்த படத்தின் வெற்றிக்கான காரணமாக பார்க்க பட்டது.

இதே போன்று விஜய் நடிப்பில் தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் லியோ படத்தில முன்னணி நடிகரான சஞ்சய், அர்ஜுன் போன்ற பலர் இடம் பெற்றுள்ளார்கள். அந்த வகையில் தற்போது காலத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும் என்பதால் தன்னுடைய படத்திலும் முன்னணி நடிகர்கள் நடிப்பதற்கு ரஜினிகாந்த்தும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

அந்த வகையில் ரஜினிகாந்தின் 170 ஆவது படத்தை ஞானவேல் இயக்குகிறார், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.இதில் ரஜினிக்கு வில்லனாக சியான் விக்ரமை நடிக்க வைப்பது பற்றி நடிகர் ரஜினிகாந்திடம் இயக்குனர் பேசியுள்ளார் அதற்கு ரஜினியும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

கடந்த சில வருடங்களாக நடிகர் விக்ரம் தொடர் தோல்வியை சந்தித்து வந்தாலும், பொன்னியின் செல்வனின் விக்ரம் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் தங்கலான் படம், விக்ரமை வேற லெவலுக்கு எடுத்துச் செல்லும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த சூழலில் ரஜினிகாந்த் படத்தில் வில்லனாக நடித்த நன்றாக இருக்காது என்பதால் ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க விக்ரம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சுமார் 50 கோடி வரை சம்பளம் பேசப்பட்டும் கூட அதற்கு முடிவே முடியாது என விக்ரம் மறுத்து விட்டாராம். அந்த வகையில் இதற்கு முன்பு ரஜினிகாந்த் தன்னுடைய படத்தில் மற்ற எந்த ஒரு முன்னணி நடிகர்களும் இடம்பெற்று விடக் கூடாது என்கின்ற கரார் காட்டி வந்த நிலையில், தற்போது ரஜினிகாந்தே விரும்பினாலும் கூட விக்ரம் நடிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.