உதவி கேட்டு பரிதவித்த வயதான தாய்…விஜய் சேதுபதி செய்த செயல்… திருந்தவேண்டிய விஜய்…

0
Follow on Google News

சமீபத்தில் விஜய் நடத்திய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வின் போது, விஜயை சந்தித்து நலத்திட்டங்கள் பெரும் மாணவர்கள் உடன் பெற்றோர்கள் என மொத்தம் மூன்று நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு சில மாணவர்கள் பெற்றோர்களில் யாராவது ஒருவர் மட்டும் உடன் வந்திருந்த நிலையில், அவர்களுடன் வேறு ஒருவர் விஜயை அருகில் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில், அங்கிருந்த பொறுப்பாளர்களிடம் பேசி, நானும் இவர்கள் குடும்ப உறுப்பினர்கள் போன்று கலந்து கொள்கிறோம் என தெரிவித்து சென்று விஜய்யை அருகில் சிலர் பார்த்துள்ளார்கள்.

அப்படி ஒருவர் எப்படியோ ஊடுருவி விஜயை சந்தித்து தன்னுடைய தம்பியை மிகவும் கஷ்டப்பட்டு மருத்துவர் படிப்பை படிக்க வைத்து வருகிறேன். மிகவும் நான் ஏழ்மையானவர், என்னுடைய சக்திக்கு மீறி என்னுடைய சகோதரரை படிக்க வைத்து வருகிறேன், இந்த வருடம் என்னால் கட்டணம் செலுத்த முடியவில்லை, நீங்க தான் உதவி செய்ய வேண்டும் என கேட்க, அதற்கு எங்கிருந்து பொறுப்பாளர்கள், கண்டிப்பாக செய்கிறோம், கண்டிப்பாக செய்கிறோம் என உதவி கேட்டு வந்த நபரை மேடையில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளார்கள்.

அங்கே இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக சினிமா துறையை சேர்ந்த முக்கிய பத்திரிகையாளர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது மலேசியாவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விஜய் சேதுபதி மலேசியா சென்றுள்ளார். அங்கே பலவேறு பகுதிகளில் விஜய் சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மலேசியாவில் விஜய் சேதுபதி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அங்கே உள்ள தமிழர்கள் சென்று விஜய் சேதுபதியிடம் புகைப்படம் எடுத்து வருகிறார்கள், மேலும் படப்பிடிப்பு இடைவேளையின் போது, அங்கே தன்னை பார்க்க வந்துள்ள ரசிகர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி அவர்களை சந்தித்து வருகிறார் விஜய் சேதுபதி.

அப்போது விஜய் சேதுபதியை சந்திக்க 50 வயது மதிக்க தக்க வயதான ஒரு தாய் மிக சோகத்துடன் சந்திக்க வந்துள்ளார். உடனே விஜய் சேதுபதி, வாங்கம்மா, என்னமா ரெம்ப சோகமாக இருக்கிறீர்கள், உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்டுள்ளார். அதற்கு அந்த அம்மா, தமிழ்நாட்டில் இருந்து இங்கே வேலைக்கு வந்தவர் நான் என தன்னை விஜய் சேதுபதியிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

பொதுவாகவே மலேசியாவுக்கு வேலைக்கு அழைத்து செல்கின்ற ஏஜென்ட்கள், சொன்ன சம்பளத்துக்கு வேளைக்கு சேர்ப்பது கிடையாது, ஒரு சில இடங்களில் சம்பளமே கூட கிடைக்காத வகையில் மாட்டிவிட்டு ஏஜென்ட்கள் எஸ்கேப்பாகி விடுவார்கள், அப்படி ஏஜெண்ட்களால் ஏமாற்றப்பட்ட தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள், அந்த கம்பெனியில் இருந்து வெளியேறி வேறு ஒரு இடத்தில் வேலை செய்வார்கள்.

அப்படி வெளியேறும் நபர்களின் விசா கலவாதியாகிவிடும் என்பதால் மறைந்து இருந்து தான் அவர்கள் வேலை செய்து வருவார்கள். இவர்கள் இமிகிரேஷன் அதிகாரிகளிடம் சிக்கினால் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும், அப்படி ஒரு சூழலில் இருந்த அந்த வயதான தாய். விஜய் சேதுபதியிடம் தான் தமிழ்நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

உடனே விஜய் சேதுபதி மலேசியாவில் உள்ள சில முக்கிய பிரமுகர்களை தொடர்பு கொண்டு அவர்களின் உதவியுடன் அந்த வயதான தாய்கான அபராத தொகை மற்றும் விமான டிக்கெட் அணைத்து செல்வுகளை ஏற்று கொண்டு மலேசியாவில் சிக்கி தவித்து இனி நம் நாட்டுக்கு போவோமா என பரிதவித்து வந்த அந்த தாயை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் விஜய் நடந்த ஒரு நிகழ்வில்,பிரபல பத்திரிகையாளர் சொன்னது போன்று தம்பி மருத்துவ படிப்புக்கு உதவி கேட்டு வந்தவரை செய்கிறோம் செய்கிறோம் என மேடையில் இருந்து இறக்கி விட்ட இந்த சம்பவம் ஒரு பக்கம் நடக்க, மறுபக்கம் மலேசியாவில் விஜய் சேதுபதி நடந்து கொண்ட மனிதாபிமான செயல் நிச்சயம் அவரை பார்த்து மற்ற நடிகர்கள் கற்று கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.