செய்வனை தான் விஜயகாந்துக்கு இந்த நிலைமைக்கு தள்ளியதா.? ஒரு வேலை அங்கே சென்றிருந்தால் காப்பற்றி இருக்கலாம்..

0
Follow on Google News

தேமுதிக நிறுவனரான விஜயகாந்த் கடந்த 26 -ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு விட திணறியதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் விஜயகாந்த் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவர், பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்துவிட்டு, தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான ரைஸ் மில்லை கவனித்து வந்தார். சிறு வயதில் இருந்தே அவருக்கு சினிமா ஆசை.

அதன் மீதான ஆர்வத்தால் தனது நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தருடன் சென்னைக்கு வந்தார். சென்னையில் பல அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் முதலில் சந்தித்தார். விஜயராஜை நடிக்க வைக்க எந்த நிறுவனமும் இயக்குநர்களும் உடனடியாக முன் வரவில்லை. ஆனால் தனது முயற்சிகளை கைவிடாத விஜயகாந்த், தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடி வந்தார்.

அவர் முயற்சிக்கு ஒரு கட்டத்தில் பலன் கிடைத்தது. சுதாகர், ராதிகா நடித்து 1979-ல் வெளியான ‘இனிக்கும் இளமை’ படத்தில் வில்லனாக அறிமுகமானார் விஜயராஜ். இதை எம்.ஏ.காஜா இயக்கி இருந்தார். இவர்தான் விஜயராஜின் பெயரை விஜயகாந்த் என மாற்றியவர். இந்தப் படம் அதிக வரவேற்பைப் பெறவில்லை. பின் பல ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜயகாந்த். தொடர்ந்து போலீஸ் ஆபீஸர் ஆக பல ஆக்சன் படங்களில் நடித்தார். தன்னுடைய நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் கேப்டன் ஆனார்.

150 படங்களுக்கு மேல் நடித்த விஜயகாந்த் 1999 ஆம் ஆண்டு நடிகர் சங்கர் தலைவரானார். அப்போது பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, நடிகர் சங்கத்தின் கடன்களை அடைத்தார். 1996க்கு பின்பு ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு பூதாகரமானதாக உருவெடுத்து வந்த நிலையில் அவரது தயக்கம் அதற்கு அணை போட்டது. ஆனால், எதற்கும் தயங்காத விஜயகாந்தோ துணிச்சலாக அரசியலிலும் கால் பதித்தார்.

சுமார் 35 வருடங்கள் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய விஜயகாந்த் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அரசியலில் மாஸ் காட்டிய விஜயகாந்த் பின்னர் உடல் நலக்குறைவால் சில சறுக்கல்களை சந்தித்தார். இரும்புப் பெண் ஜெயலலிதாவையே சட்டசபையில் எதிர்த்தவர் கேள்வி கேட்டு அலற விட்ட விஜயகாந்த் உடல்நல குறைபாடு காரணமாக நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இசையமைத்தவருமான கங்கை அமரன், கேப்டன் பற்றி சில அதிர்ச்சி தகவல்களை கூறி இருக்கிறார். தொலைபேசி வாயிலாக ஊடகம் ஒன்றிற்கு பேசிய அவர், “அமெரிக்கா உள்பட உலகின் தலைசிறந்த நாடுகளில் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் பழைய நிலைக்கு திரும்பமுடியாமல் போனது ஏமாற்றத்தை அளித்தது.

ஒருவேளை ஆன்மீகத்தின் மூலம் விஜயகாந்துக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்திருக்கலாமோ என யோசிக்கத் தோன்றுகிறது. அவருக்கு இது இறக்கும் வயதே இல்லை. இன்னும் எவ்வளவோ காலம் இருந்திருக்க வேண்டிய மனிதர் அவர், இவ்வளவு சீக்கிரம் இறந்துவிட்டார் என நினைக்கும்போது மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நானும் என் அண்ணன் இளையராஜாவும் தான் விஜயகாந்த் படங்களுக்கு அதிகளவில் இசையமைத்துள்ளோம்.

நான் அவரை வைத்து 2 படங்களையும் இயக்கி உள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்தை தன்னால் பார்க்கமுடியவில்லை. பார்த்திருந்தால் ஆன்மீகத்தின் மூலம் அவரை குணப்படுத்த அறிவுறுத்தியிருப்பேன். அவருக்கு பேச்சு வராமல் போனதற்கும் கை, கால்கள் செயலிழந்து போனதற்கும் செய்வினை தான் காரணமாக இருக்கும் போல தெரிகிறது என கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..