விஜய்க்கு எதிரிகள் வெளியில் இல்லை… அவர் கூடவே இருக்கும் இவர்கள் தான்…

0
Follow on Google News

நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியின் பெயரை அறிவித்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். விஜய் அரசியல் என்ட்ரிக்கு ஆதரவை விட எதிர்ப்பு தான் அதிகம் கிளம்பியுள்ளது, இதற்கு முக்கிய காரணம், விஜய் அவர் அருகில் சரியான நடபர்களை தேர்வு செய்யாதது தான் என்பது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த செய்தியை முழுமையாக பார்த்தால் உங்களுக்கு புரிய வரும்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை இயக்கம் முக்கிய புள்ளிகள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது, அதில் விஜயின் அரசியலில் முக்கிய நபராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமி தர்சனா டிஜிட் என்ற பெயரில் மும்பையில் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வரும் இவர் திருச்சியை சேர்ந்தவர் . அரசியல் வியூக வகுப்பாளர் ஆன இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி நடத்திய வித்தியாசமான பிரச்சாரத்தின் பின்னணியில் இருந்தவர்.

இன்றைய டிஜிட்டல் உலகில், மக்கள் மத்தியில் தங்கள் காட்சிகளை மக்கள் மத்தியில் மார்க்கெட் செய்ய அரசியல் கட்சிகள் மார்க்கெட்டிங் நிறுவனங்களை அணுகுவது உண்டு. அந்த வகையில், தற்போது விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கும் ஆரோக்கியசாமி தான் மார்க்கெட்டிங் ஆலோசகராக இருந்து வருவதாக கூறப்படுகிறது, இவர் கர்நாடகாவில் நடிகை குத்து ராமாயாவுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர்.

குத்து ரம்யா என்று அழைக்கபடும் திவ்யா சப்னா காங்கிரஸ் கட்சியில் இருந்த போது அவருடை ஹர் ஸ்டைல், உடை தேர்வு என குத்து ரம்யாவின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் ஆரோக்கிய சாமி, ஒரு கட்டத்தில் குத்து ரம்யா – ஆரோக்கிய சாமி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடுமையாக இவர்கள் விமர்சனம் செய்தது எல்லாம் தனி கதை. இந்நிலையில் தற்பொழுது அந்த ஆரோக்கிய சாமி தான் விஜய்யின் அரசியல் ஆலோசகராக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழக கட்சியின் செய்தி தொடர்பாளராக ராம்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார், இவர் முன்னதாக பத்திரிக்கையாளர் தன்யா ராஜேந்திரன் என்பவரை ஒரு பெண் என்று கூட பார்க்காமல் மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கி, போலீஸ் புகார் வரை சென்று விஜய் வருத்தம் தெரிவித்த நிகழ்வு கூட அரங்கேறியது. இந்நிலையில் விஜய்யை ஏற்கமனவே வருத்தம் தெரிவிக்கும் அளவுக்கு கொண்டு சென்ற ராம் குமாரை விஜய் கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமித்துள்ளது என்னும் எத்தனை பிரச்சனையில் விஜய் சிக்க போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த வீர விக்னேஸ்வரன் என்பவர் விஜய் தொடங்கியுள்ள கட்சியில் முக்கிய இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் பல இடங்களில் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை தான் அடுத்த தமிழக முதல்வர் என்ற அளவிற்கு பேசி இருக்கிறார். மேலும் விரைவில் பிஜேபி தமிழகத்தை பிடிக்கும் என்று பேசியிருக்கிறார். பிஜேபிக்கு ஆதரவாக செயல்படும் இவரை எப்படி விஜய் தன்னுடன் வைத்திருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடுத்ததாக பல வருடங்களாக விஜயின் நம்பிக்கைகுரியவராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், பல்வேறு இடங்களில் அனாவசியமாக பேசி விஜயை வம்பில் இழுத்து விட்டது உண்டு.எப்படி பார்த்தாலும் இவர் விஜயின் அரசியல் பயணத்திற்கு சிக்கலாகத்தான் இருக்கப் போகிறார். மேற்கூறிய முக்கிய நபர்களில் ஆரோக்கியசாமி என்பவர் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நபராக இருக்கிறார், ஆனால் மற்ற நபர்களையும் நம்பினால் விஜயின் நிலை அவ்வளவுதான். கூட இருந்தேன் விஜயின் அரசியல் பயணத்தில் தடைகளை ஏற்படுத்தி நாசம் செய்து விடுவார்கள் என எச்சரிக்கின்ற்றனர் அரசியல் விமர்சகர்கள்.