விஜய் 68 அமலாக்க துறையாக அதிகாரியாக வரும் விஜய்…

0
Follow on Google News

விஜயின் சமீப கால அரசியல் நகர்வுகளை மிகத் தீவிரமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் வாரிசு அரசியல் திணிப்பு, சிறுபான்மை மதத்தவரை தீவிரவாதி என முத்திரை குத்துவது, விமான நிலையக் கூரை இடிவது, கட்சி பேனர் விழுந்து சாலையில் செல்வோர் உயிரிழப்பது என பல அரசியல் நிகழ்வுகளை திரைக்கதையில் கச்சிதமாகப் பொருத்திஇருப்பார் வெங்கட்பிரபு.

மாநாடு படத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சீண்டுவது போன்று ஒரு காட்சி அமைத்திருக்கும், அதில் ஒய் ஜி மகேந்திரன் அவருடைய அரசியல் கட்சி தலைவரான SA சந்திர சேகரை பார்த்து, என்னையா கட்சி நடத்துறீங்க, நீ முதல்ல உன்ன தலைவன் சொல்ல சொன்னீங்க, அடுத்து உங்க புள்ளைய தலைவன் சொல்ல சொல்லுவீங்க, அதற்குப் பின்பு அவன் பிள்ளையை தலைவன் என்று சொல்லச் சொல்வீர்கள், இதே தான் உங்களுக்கு வேலையா.?

வழக்கம்போல் உங்க வீட்டிலே தலைவன் என்று சொல்லிக் கொண்டிருந்தால், நாங்க எப்போது தலைவன் ஆவது, காலம் முழுவதும் கொடிய பிடித்துக் கொண்டு உங்களுக்கு கும்பிடு போட்டுக் கொண்டே இருக்கணுமா.? ஏன் எங்களுக்கு பதவி ஆசை வரக்கூடாதா என ஒய் ஜி மகேந்திரன் மாநாடு படத்தில் பேசிய இந்த வசனம் தான் நடிகர் விஜய்யை வெகுவாக கவர்ந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தன்னுடைய அரசியல் அதிரடிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் உடனே ஒரு அரசியல் சார்ந்த படத்தை கொடுத்தாகவேண்டும் என விரும்பிய விஜய்.இயக்குனர் வெங்கட் பிரபுவை விஜய்யே நேரில் அழைத்து நம்ம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம், ஆனால் அந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்க வேண்டும். குறிப்பாக மாநாடு படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை சுட்டி காட்டிய விஜய் அதேபோன்று படம் முழுக்க பரபரப்பான ஒரு அரசியல் படமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் என கூறப்பட்டது.

இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் விஜய் அமலாக்கதுறை அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை தன்னுடைய புலனாய்வு திறமையினால் எப்படி விஜய் பிடிக்கிறார், மேலும் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்து அமலாக்க துறைக்கு அரசியல் வாதிகள் கொடுக்கும் நெருக்கடி, மேலும் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்து அமலாக்கதுறை கண்ணீல் மண்ணை தூவி விட்டு எப்படி தப்பிப்பது என பல சூழ்ச்சிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள்.

அனாலும் இறுதியில் நேர்மையான அமலாக்கதுறை அதிகாரியாக ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்கு தக்க தண்டனையை பெற்று தருகிறார் விஜய். இந்த சம்பவம் ஊழல் செய்யும் அரசியல் வாதிகளுக்கு மிக பெரிய அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமலாக்க துறை அதிகாரிகளை ஹீரோ போன்றும், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வில்லன்களாக விஜய் நடிக்க இருக்கும் வெங்கட்பிரபு இயக்கும் படத்தின் கதை இது தான் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போதைய தமிழக அரசியல் களத்தில் ஆளும் கட்சி அமைச்சர்களை அமலாக்கதுறை அதிகாரிகள் குறி வைத்து நடத்தி வரும் சோதனை. மேலும் அமலாக்க துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைகளால் ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. போன்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், அரசியல் பழிவாங்களுக்காக அமலாக்க துறையினர் பயன்படுத்தப்படுவதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த சுழலில் அமலாக்கதுறை அதிகாரியாக, விஜய் நடிக்க இருப்பது, நேரடியாக ஆளும் தரப்பை சீண்டி பார்த்து விட வேண்டும் என்கிற முடிவுக்கு விஜய் வந்துவிட்டார் என கூறப்படுகிறது. இருந்தாலும் வெங்கட்பிரபு இயக்கும் விஜய் நடிக்கும் படம் வெளியான பின்பு தான் தெரியவரும், அது என்ன கதை என்பது குறிப்பிடதக்கது.