நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்களிடம் இப்படியா.? சேட்டையை காண்பித்த சங்கர்…

0
Follow on Google News

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் இதுவரை எடுத்து முடிக்கப்பட்டுள்ள காட்சிகள் சுமார் ஆறு மணி நேரங்கள் வரை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்னும் சில படப்பிடிப்பு காட்சிகள் படமாக்கப்பட இருப்பதால் என்ன செய்யலாம் என்கின்ற மிகப்பெரிய குழப்பத்தில் இருந்து வந்துள்ளார் இயக்குனர் சங்கர்.

ஒரு கட்டத்தில் இந்தியன் 2, இந்தியன் 3 என இப்படத்தை இரண்டு பர்ட்டுகளால் வெளியிடலாம் என்கின்ற ஒரு முடிவுக்கு வந்த சங்கர். இதை தயாரிப்பு தரப்பிடமும் பேசியதாகவும், மேலும் இரண்டு பார்ட்டாக இந்த படம் வெளியாகும் பொழுது மேலும் சில நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு அதன் பின்பு எடிட்டிங் செய்யப்பட்டு வெளியாகும் போது இரண்டு பாட்டாக மிக பிரம்மாண்டமாக இருக்கும் என தயாரிப்பு தரப்பிடம் சங்கர் பேசி உள்ளார்.

ஆனால் தயாரிப்பு தரப்பு ஏற்கனவே இந்தியன் 2 படம் தொடங்கியதில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்து, இடையில் படப்பிடிப்பு தளத்தில் விபத்து, மேலும் இயக்குனர் சங்கர் மற்றும் லைக்கா இருவருக்கும் இடையிலான பிரச்சனை. அதனால் சில காலம் படப்பிடிப்பு தாமதமானது. பின்பு இந்த படத்தின் உள்ளே ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் என்ட்ரி கொடுத்த பின்பு தான் ஒரு சுமூக முடிவு எடுக்கப்பட்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

அந்த வகையில் எப்படியோ இந்த படத்தை எடுத்து முடித்தால் போதும் என்கின்ற மனநிலையில் தான் தயாரிப்பு தரப்பு ஒரு கட்டத்திற்கு வந்தது. ஆனால் மேலும் படப்பிடிப்பு சில நாட்கள் நடத்தி இரண்டு பாகங்களாக இந்த படத்தை வெளியிடுவதற்கான சங்கரின் திட்டத்திற்கு தயாரிப்பு தரப்பு இதெல்லாம் சரி வராது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருந்தாலும் இயக்குனர் சங்கர் தயாரிப்பு தயாரிப்பு தரப்பை கன்வின்ஸ் செய்து முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், அதாவது இரண்டு பாகங்களாக வெளியாகும் பொழுது மிகப்பெரிய லாபத்தை உங்களுக்கு பெற்று தரும் என்று தயாரிப்பு தரப்பை கன்வென்ஸ் செய்யும் முயற்சியிலும் இயக்குனர் சங்கர் தரப்பு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படம் தொடங்கப்படும் போது இந்த படத்தின் பட்ஜெட் 220 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இடையில் பல்வேறு பிரச்சனைகளால் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. இதன்பின்பு இயக்குனர் சங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையிலான பிரச்சனையால் படப்பிடிப்பு பாதியில் நின்றது.

இதன் பின்பு ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தில் என்ட்ரி கொடுத்தபோது இந்த படத்தின் பட்ஜெட்டை சுருக்கி மொத்தம் 170 கோடியில் எடுத்து முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு. அதற்கு சங்கரும் ஓகே செய்துள்ளார். ஆனால் தற்பொழுது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் நிர்ணயம் செய்யப்பட்ட 170 கோடியை தாண்டி தற்பொழுது 220 கோடியை தொட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தயாரிப்பு தரப்புக்கு இயக்குனர் சங்கர் மீது கடும் அதிருப்தி இருந்தாலும் இந்தியன் 2 படத்தின் அனைத்து மொழிகளுக்கான டிஜிட்டல் ரைட்சை netflix நிறுவனம் 220 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக வெளியான தகவலின் படி, இந்த படத்திற்கு போடப்பட்டுள்ள மொத்த பட்ஜெட்டையும் டிஜிட்டல் ரைட்ஸ் இல்லையே எடுத்து விட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் தயாரிப்பு நிறுவனம்.

இன்னும் இந்தியன் 2 படத்தின் சேட்டிலைட் விற்பனை இருக்கின்றது, ஆடியோ விற்பனை இருக்கிறது மற்றும் திரையரங்கு விற்பனைகள் இன்னும் இருக்கிறது மேலும் பிற மொழி ரைட்ஸும் இருப்பதால் இந்த படத்தின் அடுத்த கட்ட வியாபாரம் மிகப் பெரிய அளவில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியன் 2 படம் மிகப்பெரிய லாபத்தை அந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ஈற்று தரும் என்பதால் இந்தியன் 3 படம் வெளியாவதற்கு தயாரிப்பும் பச்சைக்கொடி கொடி கட்டுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என கூறப்படுகிறது.