ஓசில நடிச்ச கூட வேண்டாம்… சினிமாவில் இருந்து விரட்டியடிக்கப்படும் வடிவேலு.. என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்த படம் இம்சை அரசன் 24ம் புலிகேசி, இந்த படத்தை இயக்குனர் சங்கர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சங்கர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் பணிகள் தொடங்கின. ஆனால் வட குழுவுக்கு வடிவேலு முழு ஒத்துழைப்பு தராமல் மேலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து பட தயாரிப்பு தரப்பிற்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி வந்திருந்தார்.

இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் சங்கர் தரப்பிலிருந்து வடிவேலு மீது புகார் தெரிவிக்கப்பட்டது. படத்தை முடித்து கொடுக்க வேண்டும் அல்லது இதுவரை வாங்கிய சம்பளத்தை திருப்பித் தர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதை வடிவேலு ஏற்றுக்கொள்ளாததால், அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியது.

இதனால் அவரை வைத்து மீண்டும் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன் வரவில்லை. இந்நிலையில் வடிவேலின் பிரச்சனையை தீர்த்து அவருக்கு உதவி செய்ய முன் வந்தது பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம். இயக்குனர் சங்கருக்கு தரவேண்டிய பணத்தை லைக்கா நிறுவனம் செட்டில் செய்து, மேலும் தொடர்ந்து ஐந்து படங்களில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு நடிப்பதற்காக வாய்ப்பும் கொடுத்தது.

அதில் இரண்டு படம் வடிவேலு கதாநாயகனாகவும் மற்ற படங்கள் காமெடியனாகவும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. லைக்கா தயாரிப்பில் சமீபத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டன் படத்தில் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து தயாரிப்பு தரப்பிற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் சொல்வதை வடிவேலு கேட்பதில்லை, கதை காட்சிகள் அனைத்துமே வடிவேலு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி படத்தை கெடுத்துள்ளார்.

அதேபோன்று லைக்கா தயாரிப்பில் சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பில் தொடர்ந்து படத்தின் இயக்குனர் பி வாசு மற்றும் வடிவேலு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் படத்தின் படப்பிடிப்பை மிக சிரமத்துடன் நடத்தி வருகிறார் பி வாசு. இதனை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் பி வாசுவை தொடர்பு கொண்ட தயாரிப்பு நிறுவனம் வடிவேலு நடிக்கும் காட்சிகளை பெரும் அளவு குறைத்து விடுங்கள் என்றும்.

முடிந்தளவு அவருக்கு இந்த படத்தில் வடிவேலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என தெரிவித்துவிட்டது. மேலும் அடுத்தடுத்து லைக்கா தயாரிப்பில் வடிவேலு நடிப்பதாக இருந்த நிலையில் இனி வடிவேலு ஓசில நடிச்சா கூட வேண்டாம் என்கின்ற மனநிலைக்கு வந்துள்ளதால். உதவி செய்ய வந்த நிறுவனத்தையே மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்திய வடிவேலு இன்னும் திருந்தவில்லை என்பதால் ஒட்டுமொத்த சினிமாவில் இருந்தும் விரட்டி அடிக்கப்பட்டு நிரந்தரமாக சினிமாவுக்கு ஓய்வு கொடுக்கும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.