பணத்தை வாங்கிட்டு தண்ணி காட்டிய சிவகார்திகேயனுக்கு தயாரிப்பு நிறுவனம் வெச்ச ஆப்பு..

0
Follow on Google News

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயனிடம் கால் சீட் பெற்ற சன் பிக்சர்ஸ் நிறுவனம், அவருக்கான அட்வான்ஸ் தொகையும் கொடுத்துள்ளது. இதன்பின் இந்த படத்திற்கான இயக்குனர் முத்தையாவை தேர்வு செய்துள்ளதாக சிவகார்த்திகேயனிடம் தெரிவிக்க, அதற்கு சிவகார்த்திகேயனும் முத்தையா இயக்கத்தில் தான் நடிக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் இயக்குனர் முத்தையாவிடம் பேசி ஒரு கிராமத்து கதையை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தயார் செய்யுங்கள் என தெரிவித்துள்ளனர், இதன் பின்பு அடுத்த சில நாட்களில் ஒரு அருமையான கிராமத்து கதையை தயார் செய்துள்ள இயக்குனர் முத்தையா அந்த கதையை சன் பிக்ச்சர் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்க, கதை மிகவும் சன் பிக்ச்சர்க்கு பிடித்து போக, இயக்குனரிடம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.

அதில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு இயக்குனர் முத்தையாவுக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து இயக்குனர் முத்தையாவிடம் விரைவில் சிவகார்த்திகேயனை உங்களை அழைத்து கதை கேட்க சொல்லுகிறோம் அவர் கதையை கேட்ட பின்பு இந்த ப்ராஜெக்ட்டை உடனே தொடங்கலாம் என்று தயாரிப்பு தரப்பு முத்தையாவுக்கு உறுதியளித்துள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு இயக்குனர் முத்தையாவிடம் கதை கேட்க வலியுறுத்தி வந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம் . ஆனால் தொடர்ந்து முத்தையாவிடம் கதை கேட்பதை புறக்கணித்து வந்துள்ளார் சிவகார்த்திகேயன். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் முத்தையா இயக்கத்தில் நடிக்க தயார் என்று சொன்ன பின்பு தான் இயக்குனர் முத்தையாவிடம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேசி கதையை தயார் செய்ய வைத்தது.

ஆனால் தொடர்ந்து முத்தையாவிடம் கேட்காமல் கதை கேட்காமல் சிவகார்த்திகேயன் புறக்கணித்து வந்த நிலையில் இயக்குனர் முத்தையா அடுத்தடுத்த படங்களில் கமிட் பிசியானார். தற்பொழுது ஆர்யா நடிக்கும் காதர் பாட்ஷா படத்தை இயக்கும் இயக்குனர் முத்தையா அந்த படத்திற்காக நான்கு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார், அடுத்து அவர் இயக்கும் படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு வருகிறார் முத்தையா.

இந்த நிலையில் இனிமேல் சிவகார்த்திகேயன் முத்தையாவிடம் சென்று கதை கேட்டாலும் கூட இரண்டு வருடங்களுக்கு முன்பு பேசிய 2 கோடி சம்பளத்திற்கு முத்தையா படம் இயக்க முன்வர மாட்டார். மேலும் தற்போது ஐந்து கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முத்தையாவை ஒப்பந்தம் செய்வதர்க்கு விருப்பமும் இல்லை.

இதனால் சிவகார்த்திகேயன் மீது கடும் கோபத்தில் இருந்து வந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனுக்கு நேரம் பார்த்து ஆப்பு வைக்க காத்திருந்தது, அந்த வகையில் சிவகார்த்திகேயன் தற்பொழுது நடித்து வரும் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த பின்பு, சிவகார்த்திகேயன் அறிவித்த தேதியில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தை ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இதனால் மாவீரன் படம் அதே தேதியில் வெளியானால் எதிர்பார்த்த வசூலை பெறாது இதனால் மிகப் பெரிய நஷ்டத்தை அடையும் என்பதால் வேறு ஒரு தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்வதற்காக தள்ளாடி வருகின்றார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே ஒரு தேதியை குறிப்பிட்டு மாவீரன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார் சிவகார்த்திகேயன்.

ஆனால் அதே தேதியில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை ரிலீஸ் செய்வதை தொடர்ந்து அந்த தேதியில் இருந்து வேறு ஒரு தேதிக்கு மாற்றி வைத்தார் சிவகார்த்திகேயன். ஆனால் தற்பொழுது மாற்றிய தேதியிலும் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இறக்கி உள்ளதால் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தேதி கிடைக்காமல் எந்த தேதியில் ரிலீஸ் செய்வது என தள்ளாடி வருகிறார் சிவகார்த்திகேயன்.