ஆள விடு சாமி… அஜித்துடன் எனக்கெதுக்கு பிரட்சனை.. விக்னேஷ் சிவன் வீசிய வலையில் சிக்காத சிவகாத்திகேயன்..

0
Follow on Google News

அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற துணிவு படத்தை முடித்துவிட்டு லைக்கா தயாரிப்பில், அஜித் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் செய்த சில குளறுபடியால் பிப்ரவரி முதல் வாரம் தள்ளிவைக்க பட்டது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பே விக்னேஷ் சிவன் இந்த படத்தில் கமிட் செய்யப்பட்டு, படத்தின் முழு கதையையும் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டார்.

படத்தின் படப்பிடிப்பு தொடக்குவதற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், விக்னேஷ் சிவனை நேரில் அழைத்த அஜித், படத்தின் முழு கதையை கேட்டுள்ளார். விக்னேஷ் சிவன் கதையை சொன்னதும் டென்ஷனான அஜித், எட்டு மாதமாக இந்த குப்பை கதையை தான் தயார் செய்து கொண்டிருந்திர்களா.? என முகத்தில் தூக்கி எறிந்தது போன்று பேசிய அஜித், எனக்கு இந்த குப்பை கதையில் நடிக்க உடன்பாடில்லை என நேரடியாகவே அஜித் தெரிவித்தாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் லைக்கா மற்றும் அஜித் இருவரும் இந்த கதை வேண்டாம் என புறக்கணிக்க,வேறு ஒரு கதையை தயார் செய்து வருகிறேன் என விக்னேஷ் சிவன் தெரிவித்தும் கூட அதற்கு அஜித் மற்றும் லைக்கா நிறுவனம் என இரண்டு தரப்பும் ஒப்பு கொள்ளவில்லை, கணவனுக்கு சிபாரிசு செய்யும் விதத்தில் லைக்கா நிறுவனத்தை தொடர்பு கொண்டு நயன்தாரா பேசியும் கூட, விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் விக்னேஷ் சிவனுக்கு பதில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் மகிழ் திருமேனி கமிட்டாகி புதிய படத்திற்கான வேலைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், அதே நேரத்தில் அஜித் நடிக்கும் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டாலும் கூட, தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தான் யார் என்பதை நிரூபிப்பேன் என்கிற நம்பிக்கையில் தன்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கையில் அதிரடியாக இறங்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

அந்த வகையில் லவ் டுடே படத்தின் இயக்குனர் நடிகர் பிரதீப் ரங்கநாதனிடம் விக்னேஷ் சிவன் கதை ஒன்றை சொல்லியுள்ளார், உடனே AGS நிறுவனத்திடம் விக்னேஷ் சிவனை அழைத்து சென்ற பிரதீப் ரங்கநாதன் அங்கே விக்னேஷ் சிவன் கதையை தெரிவிக்க, அவர்களுக்கும் கதை பிடித்து போனது, இதனை தொடர்ந்து புதிய படத்தின் அடுத்தடுத்து டிஷ்கசன் நடைபெற்றுள்ளது. அப்போது இந்த படத்தில் இசை அனிருத், மற்றும் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பது குறித்து விக்னேஷ் சிவன் தயாரிப்பு தரப்பிடம் தெரிவித்துள்ளார்.

அனிருத், நயன்தாரா என்றால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டி வரும், அதனால் படத்தின் பட்ஜெட் 45 கோடி வரை அதிகரிக்கும் என தயங்கிய AGS நிறுவனம், ஏற்கனவே பிரதீப் ரங்கநாதனை வைத்து சுமார் 5 கோடி பட்ஜெட்டில் லவ் டுடே எடுத்ததை மனதில் வைத்து, புதிய படத்திற்கான பட்ஜெட் 45 கோடி என்பது அதிகம் என விக்னேஷ் சிவன் ப்ரோஜெட்டை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை சந்தித்த விக்னேஷ் சிவன் புதிய படத்தின் கதை மற்றும் அதில் பிரதீப் ரங்கநாதன், நயன்தார நடிக்க இருப்பது, அனிருத் இசை அமைக்க இருப்பது பற்றி தெரிவித்து, படத்தின் பட்ஜெட் சுமார் 40 கோடி வரை வரும் என்கிற தகவலையும் தெரிவிக்க, உடனே இந்த ப்ரோஜெட்டை ஓகே செய்த ராஜ் கமல் பிலிம்ஸ் படத்திற்கான அடுத்த கட்ட பணிகளை தொடங்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனை சந்தித்து இந்த கதையை தெரிவிக்கும் முன்பு இந்த படத்திற்கு நடிகர் சிவகார்திகேயனிடன் தான் கால் சீட் கேட்டுள்ளார் விக்னேஷ் சிவன். ஆனால் ஏற்கனவே அஜித் நடிக்கும் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்ற பட்டதால், மேலும் அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் அது பிரச்ச்னையாக உருவெடுத்துள்ள இந்த சூழலில் விக்னேஷ் சிவன் நடிக்கும் படத்தில் கமிட்டானால் அது அஜித் மற்றும் அஜித் ரசிகர்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால்,

விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் சிவ கார்த்திகேயன், இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நண்பர்கள், அது மட்டுமின்றி இந்த படத்தில் கமிட்டாகியுள்ள அனிருத் – சிவகார்திகேகயன் மிக நெருக்கிய நண்பர்கள், நயன்தாரா உடன் நெருக்கி பழக கூடியவர் சிவகார்த்திகேயன், இருந்தாலும் எதற்கு அஜித்தின் எதிர்ப்பை நாம் எதிர் கொள்ள வேண்டும் என விக்னேஷ் சிவனுக்கு கால் சீட் கொடுக்காமல் கல்தா கொடுத்துள்ளார் சிவகார்திகேயன், இதன் பின்பே பிரதீப் ரங்கநாதனிடம் சென்றுள்ளார் விக்னேஷ் சிவன் என கூறப்படுகிறது.