நாணயம் இல்லாத சிம்பு .. இதுல பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்லை..

0
Follow on Google News

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாநாடு படத்திற்கு முன்பு, சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் காணாமல் போயிருந்தார் சிலம்பரசன். பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கிய சிம்புவின் உடல் பருமனும் அதிகரித்தது. மாநாடு திரைப்படத்திற்கு முன்பு அவர் நடித்த திரைப்படங்களில் குறித்த நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவது கிடையாது.

இதனால் சிலம்பரசனை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும் சிலம்பரசனை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி தந்தது. தெரியாமல் வந்து சிக்கி விட்டோம், இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டு தப்பித்தால் போதும் என்கிற மனநிலையில் இருந்தனர் சிம்பு நடிக்கும் படத்தின் இயக்குனர்கள்.இதனால் சிலம்பரசனை வைத்து படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தவிர்த்து வந்தனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மாநாடு திரைப்படத்திற்கு முன்பு சிம்புவின் சம்பளம் 6 கோடி என இருந்தது. மேலும் சிம்புவுக்கு மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு, பட வாய்ப்புகள் இல்லாததால், மிக குறைந்த சம்பளத்திற்கு தன்னுடைய தயாரிப்பில் சிம்புக்கு தொடர்ந்து மூன்று படங்கள் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேசன்.

மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு ஐசரி கணேசன் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே மாநாடு படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த நிலையில் மாநாடு படம் வெளியான பின்பு வெந்து திணிந்தது காடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அடுத்தடுத்து ஐசரி கணேசன் தயாரிப்பில் ஏற்கனவே பேசிய அதே சம்பளத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று முரண் பிடித்து வந்துள்ளார் சிம்பு.

இந்த நிலையில் படு தோல்வி அடைந்த வெந்து தணிந்தது காடு படம், மிகப்பெரிய ஹிட் அடித்தது என்று ஒரு போலியான விளம்பரம் செய்து, நடிகர் சிம்புவுக்கு விலை உயர்ந்த காரும், அந்தப் படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு டூவீலரும், மேலும் வெந்து தணிந்தது காடு படத்தை அதிக அளவில் புரமோஷன் செய்த கூல் சுரேஷுக்கு ஐ போனும் பரிசளித்து பரிசளித்தார் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன். இதனால் ஓரளவு சிம்பு இமேஜ் காக்கப்பட்டது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிப்பில் மூன்று படங்கள் கமிட்டாகி இருந்தது சிலம்பரசன் தற்பொழுது கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்சில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் கமிட் ஆகி இந்த படத்திற்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சிலம்பரசன். இதனைத் தொடர்ந்து ஐசரி கணேசன் தரப்பில் இருந்து சிலம்பரசனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தங்களிடம் மூன்று படத்தில் கமிட் ஆகி ஒரு படம் நடித்து முடித்துவிட்டு, பாக்கி இன்னும் இரண்டு படங்கள் உள்ளன, அதற்குள் ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு கால் சீட் கொடுத்து சென்றால் என்ன அர்த்தம் என ஐசரி கணேசன் தரப்பில் இருந்து சிம்புவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து நேரடியாக ஐசரி கணேசனிடம் பேசுவதை தவிர்த்து விட்டு, ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் பேசி சமாதானம் செய்துள்ளார் சிம்பு.

இதே போன்று இடத்தில் சிலம்பரசன் AAA படத்தில் நடித்த போது அந்த சிலம்பரசனுக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டபோது, அடுத்து சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு படத்திற்கு மைக்கல் ராயப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது சிலம்பரசன் நேரடியாக மைக்கேல் ராயப்பனை தொடர்பு கொண்டு தன்னுடைய பிரச்சனையை தீர்த்துக்கொள்ளாமல் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை மூலம் பேசி பிரச்சனையை சரி செய்து கொண்டார்.

இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரிடமும் சொன்ன வாக்குப்படி நாணயம் இல்லாமல் நடந்து கொள்ளும் சிலம்பரசன், ஆனால் மேடைகளில் மட்டும் வாய் கிழிய பேசி வருவது, இந்த பேச்சுக்கு மட்டும் ஒன்றும் குறைச்சல் இல்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது