மாநாடு வெற்றி… ஆணவத்தை தலைக்கு ஏற்றிய சிம்பு….தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்.! என்ன நடக்குது தெரியுமா.?

0
Follow on Google News

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சிலம்பரசன், அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த போதே பல வெற்றிப்படங்களை கொடுத்து, மக்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். அதன் பின்பு கதாநாயகனாக அவதாரம் எடுத்த நடிகர் சிலம்பரசன், தனது தந்தை டி ராஜேந்திரன் இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார்.

இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படம் படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் நடிகர் சிலம்பரசன் தன்னையே அடுத்த ரஜினிகாந்த் என்கின்ற தோரணையில் அவர் வெளிப்படுத்திய காட்சிகள்தான் என கூறப்பட்டது. இதன் பின்பு அடுத்தடுத்து அவர் ஸ்டைல் என்கிற பெயரில் கையை, கால்களை ஆட்டி நடித்த படங்கள் சரிவர போகவில்லை என்றாலும், இடையில் சில படங்கள் வெற்றியை கொடுத்தது.

ஆனால் தொடர்ந்து சிலம்பரசனின் ஆணவம், சரியாக படப்பிடிப்பு தளத்துக்கு வராதது,மேலும் அவர் நடிக்கும் படங்களில் அவருடைய தந்தை டி ராஜேந்திரன் மற்றும் அவருடைய தாயார் உஷா ராஜேந்திரன் ஆகியோர் தலையீடு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்தது, இதனால் அடுத்து சிலம்பரசனை வைத்து படம் எடுக்க யாரும் முன்வரவில்லை, இதனால் சில காலம் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் நான் திருந்திட்டேன் இனிமேல் சினிமா சூட்டிங் ஒழுங்கா வருவேன் என ரீ என்ட்ரி கொடுத்த சிலம்பரசன் நடித்த அடுத்தடுத்த படங்கள் தோல்வியை கொடுத்தாலும், சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது, மாநாடு படம் வெற்றி அடையும் வரை அமைதியாக இருந்த சிலம்பரசன் மாநாடு பட வெற்றிக்குப் பின் மீண்டும் தனது ஆணவத்தையும் காட்டத் தொடங்கியுள்ளார்.

சினிமாவில் காணமல் போன சிலம்பரசனை கண்டு பிடித்து கொடுத்த மாநாடு பட வெற்றி விழாவுக்கு கூட வராமல் புறக்கணித்து சிம்பு, மாநாடு படத்திற்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய சிலம்பரசன், மாநாடு பட வெற்றிக்குப் பின்பு தனது சம்பளத்தை மூன்று மடங்காக 18 இருந்து 20 கோடி வரை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரை ஒப்பந்தம் செய்ய வந்த தயாரிப்பாளர்கள் சிலம்பரசனின் சம்பளத்தை கேட்டு தெறித்து ஓடி வருகின்றனர்.

மேலும் இதற்கு முன் என்னை புறக்கணித்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்னை தேடி வரும் காலம் இது என தனக்கு நெருக்கமானவர்களிடம் சிலம்பரசன் பேசி வந்தாலும் கூட, அடுத்த இரண்டு படத்தில் சிம்பு தனது ஆணவத்தால், அவருடை தந்தையின் தலையீட்டு காரணமாக காணமல் போய் விடுவார், அதன் பின்பு அவரை வைத்து அவர் தந்தை தான் தயாரித்து, இயக்கி நடிக்க வைக்க வேண்டும் என சிலம்பரசன் ஆணவத்தை பார்த்து சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.