தம்பி வளர்ந்துட்டு வர .. பார்த்து இரு… விஜய்க்கு ரஜினி சொன்ன அட்வைஸ்..

0
Follow on Google News

கடந்த சில தினங்களாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் – விஜய் ரசிகர்களுக்கு இடையிலான மோதல் இருந்து வந்த நிலையில், ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு பின்பு, ரஜினி – விஜய் ரசிகர்களுக்கு இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல இடங்களில் ரஜினியை சீண்டும் வகையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஓட்டுவதும், அந்த போஸ்டரை ரஜினி ரசிகர்கள் கிழித்து விட்டு, பதிலுக்கு அவர்கள் போஸ்டர் ஓட்டுவதும் அரங்கேறி வருவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா கதை விஜய்க்காக தான் சொன்னார் என்கிற பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில், பிரபல சினிமா துறையை சேர்ந்த விநியோகஸ்தரும், ரஜினியிடம் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக நெருக்கமாக பழகி வரக்கூடியவரான திருப்பூர் சுப்பிரமணியன் இது குறித்து பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ரஜினிகாந்த் எப்பொழுதுமே கமர்சியல் படங்கள் பண்ணுவதற்கு விரும்புவார், தன்னை நம்பியுள்ள தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருமே நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் ரஜினிகாந்துக்கு உண்டு, இருந்தாலும் ரஜினிகாந்த் நடிக்கும் படம் நஷ்டத்தை சந்தித்தால் அதை உடனே சரி செய்து கொடுக்கக் கூடியவர் ரஜினிகாந்த் என தெரிவித்த திருப்பூர் சுப்பிரமணியம்.

இதுபோன்ற ஒரு மனிதர் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் ஒருவர் மட்டுமே எனக்குத் தெரிந்து உள்ளார், அப்படிப்பட்ட ரஜினிகாந்த்தை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதற்கு நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும், சூப்பர் ஸ்டார் என்கின்ற பட்டம் அவருக்கு சும்மா வரவில்லை, அதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளார், என்ன பாடுபட்டுள்ளார் என்பதை அவருடன் இருந்த எங்களுக்கு தான் தெரியும் என தெரிவித்த திருப்பூர் சுப்பிரமணியன்.

அதனால் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான் என தெரிவித்தவர், மேலும், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கழுகு – காக்கா கதை சொன்னது பலரும் நடிகர் விஜய்க்காக தான் என தெரிவிக்கிறார்கள், நானும் சொல்கிறேன் நடிகர் விஜய்காக தான் நடிகர் ரஜினிகாந்த் அந்த காக்கா கதையை ஆடியோ வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

எதற்காக நடிகர் விஜய்க்காக ரஜினிகாந்த் இந்த காக்கா கதையை சொல்கிறார் என்றால், தம்பி நீ நல்லா வளர்ந்து வந்து கொண்டிருக்கிறாய், மிகப்பெரிய உயரத்திற்கு நீ சென்று கொண்டிருக்கிறாய் ஆனால் உன்னைச் சுற்றி ஒரு காக்கா கூட்டம் இருக்கிறது, அந்த அந்த காக்கா கூட்டத்தை நீ கண்டு கொள்ளாமல் உன்னுடைய பாதையை நோக்கி நீ பயணி எனஅந்த அர்த்தத்தில் தான் விஜயை நோக்கி காக்கா கதையை ரஜினிகாந்த் தெரிவித்தார் என தெரிவித்த திருப்பூர் சுப்பிரமணியன்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் எந்த இடத்திலும் யாரையும் தரை குறைத்து பேச வேண்டும் என்று என்றைக்குமே நினைத்ததில்லை அவருடன் 30 வருடங்களுக்கு மேலாக நான் பழகி உள்ளதை வைத்து சொல்கிறேன், விஜய் உயரத்திற்கு வந்துவிட்டார் என்று அவர் பொறாமை பட்டதில்லை, காக்கா என்று நடிகர் ரஜினிகாந்த் விஜயை குறிப்பிட்டு பேசவில்லை, ஆனால் விஜய் சுற்றி இருக்கக்கூடிய காக்கா கூட்டத்திடம் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தம்பி என்கின்ற அர்த்தத்தில் தான் நடிகர் ரஜினிகாந்த் அந்த காக்கா கதையை சொன்னதாக திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தவர்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் இதுவரை நடித்த திரைப்படங்களில் ஒரு 25 சதவீதம் தோல்வி அடைந்தாலும் மற்ற பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் லாபத்தையும் பெற்று தந்தது அதேபோன்றுதான் நடிகர் விஜய் நடித்த படங்கள் பெரும்பாலும் நல்ல கமர்சியல் ஹிட் கொடுத்து பெரும் லாபத்தை பெற்று தந்தது, அந்த வகையில் இன்று விஜய் கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து எம்ஜிஆர் ரஜினிக்கு அடுத்த வரிசையில் வருவது விஜய் தான் இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என ஆணித்தரமாக தெரிவித்தார் திருப்பூர் சுப்ரமணியம்.