இந்த படத்தின் காப்பி தான் ஜெயிலர்… படம் வெளியாகும் முன்பே மாட்டி கொண்ட நெல்சன்.. எந்த படத்தின் காப்பி தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் உள்ள தற்பொழுது இருக்கும் இளம் இயக்குனர்கள் சொந்தமாக சிந்தித்து புதியதாக ஒரு கதையையோ அல்லது அந்த படத்தின் காட்சியையோ உருவாக்குவது மிகக் குறைவு. இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளியான படத்தின் கதைகளை திருடி, அந்த கதைக்கு ஏற்றார் போல் ஆங்கிலப்படம் மற்றும் பிற மொழி படங்களில் இருந்து காட்சிகளை திருடி படம் உருவாகுவது தற்பொழுது தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கும் அனைத்து படங்களும், இதுபோன்ற ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் கதை சாயலிலும், பல ஆங்கில படத்தில் உள்ள காட்சிகளும் இடம் பெற்று கையும் களவுமாக மாட்டிய சம்பவமும் அரங்கேறி வருகிறது.இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் ஏற்கனவே விஜயகாந்த் நடிப்பில் வெளியான சேதுபதி ஐபிஎஸ் படத்தின் கதையின் சாயல் என்கின்ற ஒரு விமர்சனம் இருந்தது.

இந்த நிலையில் தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் நெல்சன். பொதுவாக ஒரு படம் திரைக்கு வந்த பின்பு தான், அது எந்த படத்தின் காப்பி என்பது தெரியவரும், ஆனால் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஆரம்ப கட்டத்திலேயே, இது ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் காப்பி என்கின்ற ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடைசியாக வெளியான பிகில் படம், தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெளியான ஒரே படத்தின் கதை சாயலில் இல்லாமல் பல படங்களில் இருந்து கதைகளை திருடி எடுக்கப்பட்டுள்ளது என்கிற விமர்சனம் எழுந்தது. அந்த வகையில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படம், ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான நான்கு படங்களில் இருந்து கதை மற்றும் காட்சிகளை திருடி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான பல்லாண்டு வாழ்க என்கின்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் ஜெயிலராக நடித்திருப்பார். இந்த படத்தில் கைதிகளை ஜெயிலில் சுதந்திரமாக பழகு விட்டு, மனதளவில் அவர்களை திருத்தும் ஒரு கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் நடித்திருப்பார். அதேபோன்று கைதி கண்ணாயிரம் என்கின்ற படத்தில் ஆர் எஸ் மனோகரன் ஒரு கொடூரமான கைதியாக இந்த படத்தில் நடித்திருப்பார்.

உதயகீதம் படத்தில் நடிகர் மோகன் கைதியாகவும், நடிகை அம்பிகா ஜெயிலராகவும் நடித்திருப்பார்.இந்த படம் சென்டிமென்ட் கலந்த ஒரு லவ் ஸ்டோரி கதை. இதே போன்று சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான காதல் தெய்வம் என்கின்ற படத்தில் சிவாஜி கணேசன் ஒரு கைதியாக நடித்திருப்பார். இந்த நிலையில் இந்த நான்கு படத்தில் இடம்பெற்ற காட்சிகளையும், கதைகளையும் காப்பியடித்து அதை தற்போதைய சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களை கொண்டு வந்து ஜெயிலர் படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இயக்குனர் அட்லியை பின்பற்றி ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் கதைகளை திருடி, அந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகளை தற்போதைய சூழலுக்கு ஏற்றார் போல் மாற்றி ஜெயிலர் படத்தை எடுத்து வருகிறார் நெல்சன் என்று கூறப்படும் நிலையில், ஒரு படம் திரையில் வெளியான பின்பு தான் தெரியும் இது எந்த படத்தின் காப்பி என்று தெரியும், ஆனால் ஜெயிலர் படம் படப்பிடிப்பு ஆரம்பத்திலே எந்த படத்தின் காப்பி என்கிற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.