இளையராஜா மகள் பவதாரணி இறந்த அன்று மனிதாபிமானம் இல்லாமல் மகிழ்ச்சியாக ரஜினிகாந்த் என்ன செய்துள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

சமீப காலமாக தமிழ் சினிமா துறையினரின் நடவடிக்கைகளை பார்க்கும் போது, மனிதநேயம் என்பது கொஞ்சம் கூட நடிகர்கள் நடிகைகளிடம் இல்லையா.? என்று மக்களே கடும் கோபத்தில் சினிமா துறையினரை விமர்சிக்கும் அளவிற்கு உள்ளது. இதற்கு முன்பு சினிமா மோகத்தில் இருந்த தமிழக மக்கள் சமீப காலமாக நடிகர் நடிகைகளின் நடவடிக்கைகளை பார்த்து தமிழ் சினிமா மீது இருந்த மோகத்தில் இருந்து விடுபட்டு அவர்களுக்கு எதிராக திரும்பும் மனநிலைக்கு உருவாகி வருவதை மக்கள் மத்தியில் பார்க்க முடிகிறது.

இதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜயகாந்த் மரணம் அடைந்த போது துறையைச் சார்ந்த பல நடிகர்கள் நடிகைகள் சக கலைஞன் அதுவும் தமிழ் சினிமாவை வாழ வைத்த ஒரு மனிதன் இறப்பிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாமல் நியூ இயர் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்தது, சினிமா துறையினர் மீது தமிழக மக்கள் கடும் கோபத்திற்கு ஆளானது, அதாவது விஜயகாந்த் மறைந்த போதே தமிழ் சினிமா நடிகர் நடிகைகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய தமிழக மக்கள் விழித்து கொண்டார்கள் என்று கூட சொல்லலாம்.

இந்த நிலையில் சினிமா துறையில் இசையில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கக்கூடியவர் இளையராஜா, அதே போன்று நடிகராக மிகப்பெரிய உச்சத்தில் இருந்து வருபவர் ரஜினிகாந்த், இந்த இரண்டு பிரபலங்களுக்கும் இடையில் நெருக்கமான நட்பு இன்று வரை தொடர்கிறது.ரஜினி காந்த் தன்னுடைய மன நிம்மதிக்காக கடந்த காலங்களில் இமயமலைக்கு சென்று பயணம் மேற்கொள்வார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மன நிம்மதிக்காகவும் மேலும் ஓய்வு நேரங்கள் கிடைத்தால் இளையராஜாவின் ஸ்டூடியோ சென்று அங்கே இளையராஜா அமைக்கும் இசை பணிகளை மிக கூர்ந்து கவனித்து வந்துள்ளார்.

மேலும் ஆன்மிகம் பல விஷயங்களை இளையராஜா உடன் கலந்து பேச கூடியவர் ரஜினிகாந்த். இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் ஆழமான நட்ப்புக்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த், இளையராஜா இருவருமே தீவிர ஆன்மீகவாதி என்பதால் தான். இளையராஜாவை ரஜினிகாந்த் சாமி என்றுதான் அழைப்பார் அதேபோன்று ரஜினிகாந்த் இளையராஜாவும் சாமி என்று தான் அழைப்பார். அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த இளையராஜாவுக்கு நெருக்கமாக இருந்த இளையராஜாவின் மகள் புற்றுநோய் காரணமாக மிகக் குறைந்த வயதிலேயே மரணம் அடைந்தது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இளையராஜா தன்னுடைய மகளிடம் மட்டுமே அதிக பாசமும் அன்பும் கொண்டவர் என்பதால் தன்னுடைய மகள் இறந்த துக்கம் தாங்காமல் மனம் உடைந்து இலங்கை மருத்துவமனையில் கண்கலங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படி சினிமா துறையைச் சார்ந்த, மேலும் ரஜினியின் நெருக்கமாக இருக்கக்கூடிய இளையராஜாவின் மகள் இறந்த அதே நாளில் தான் ரஜினிகாந்த் மகள் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் சென்னையில் நடந்தேறி உள்ளது.

இளையராஜாவின் மகள் காலையில் மரணம் அடைகிறார், அன்று மாலையே ரஜினி லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ச்சியுடன் அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தாலும் கூட, அன்று இளையராஜா மகள் இறந்து விட்டார் என்பதற்காக அந்த நிகழ்ச்சியை வேறு ஒரு தேதிக்கு தள்ளி வைத்திருந்திருக்கலாம்.

ஆனால் அதை செய்யாமல் ஒரு பக்கம் இளையராஜா குடும்பத்தினர் மகள் இறந்த துக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கையில் மறுபக்கம் ரஜினிகாந்த் மகள் இயக்கத்தில் தான் நடித்த லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை கோலங்களாக கொண்டாடி முடித்துள்ளார் ரஜினிகாந்த். அந்த வகையில் தமிழ் சினிமா துறையினரின் சமீபகால நடவடிக்கைகள் யார் செத்தால் நமக்கென்ன, என்று பணத்தையும் அவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சியை நோக்கி தான் ஓடிகொடிருக்க்கும் சினிமா துறையினரை மக்களும் புறக்கணிக்க தயாராகி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.