உறவினராக இருந்தாலும் விக்ரமை உதாசீனபடுத்திய பிரசாந்த் தந்தை… தலைகீழாக மாறிய விக்ரம் வாழ்க்கை..

0
Follow on Google News

சீயான் விக்ரம்’ என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் நடிகர் விக்ரம் நடிப்பில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல் திரையுலகில் கால் பதித்தவர் ஆவார். இவர் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு, சினிமாவில் இவருக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள மிகவும் பாடுபட்டிருக்கிறார்.

இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விக்ரம், ஆரம்ப காலத்தில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாகப் போராடி இருக்கிறார். சினிமாவில் இயக்குனர்கள் உருவாக்கும் ஒரு கதாபாத்திரத்திற்காக தன் உடலையும் வருத்திக் கொண்டு, தனது முழுமையான அர்ப்பணிப்பையும் முதலீடு செய்து அருமையாக நடித்துக் கொடுக்கும் திறமை வாய்ந்த விக்ரம் , முதன்முதலாக 1990 ஆம் ஆண்டில் வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தில் தான் அறிமுகமானார்.

அதனையடுத்து விக்ரம் நடித்த பல படங்களும் தோல்வியையேத் தழுவின. இருப்பினும், சோர்ந்து போகாத நடிகர் விக்ரம், நடிப்பின் மீது தனக்கு இருந்த அதீத காதலால் விடாது முயற்சித்து, இயக்குனர் பாலா இயக்கம் சேது படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். விக்ரமின் சினிமா வாழ்க்கையில் சேது படம் மிக முக்கியமான அடையாளமாக மாறிப் போனது. அந்தளவிற்கு பட்டிதொட்டி எங்கும் சேது படம் ஹிட் அடித்து விட்டது.

மேலும், விக்ரமின் நடிப்பைப் பார்த்து ஏராளமான ரசிகர்களும் அவரைக் கொண்டாட ஆரம்பித்தனர். தனது மொத்தத் திறமையையும் சேது படத்தில் வெளிப்படுத்திய விக்ரமுக்கு அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான், காசி, ஜெமினி, தூள், பிதாமகன் என பல சூப்பர் ஹிட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் விக்ரமின் அர்ப்பணிப்பான நடிப்புத் திறமை மிகப்பெரிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

இயக்குனர் சங்கர், ஹரி என பல்வேறு இயக்குனர்களும் விக்ரமின் திறமையைப் பயன்படுத்தி சாமி, அந்நியன் போன்ற மிகப்பெரியஹிட் படங்களை வெளியிட்டனர். இவ்வாறு இளம் வயதில் மட்டுமில்லை 50 வயதிலும் கூட சினிமாவுக்காக பல்வேறு வலிகளையும் தாங்கிக் கொண்டு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். ஒரு இயக்குனர் என்ன கற்பனை செய்கிறாரோ அதை அப்படியே நூறு சதவீதம் தன் நடிப்பில் உருவாக்கிக் கொடுக்கும் அசாதாரண திறமைப் படைத்த விக்ரம், ஆரம்ப காலத்தில் பட வாய்ப்பிற்காக மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.

தனது திறமையை வெளிப்படுத்துவதற்காக தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் வாய்ப்பு கேட்டு அலைந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படிதான், நடிகர் பிரசாந்தின் குடும்பத்திடம் உதவி கேட்டிருக்கிறார். விக்ரம் , பிரசாந்த் இருவரும் சொந்தக் காரர்கள் தான். மேலும், இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்குள் வந்தார்கள். ஆனால், நடிகர் பிரசாந்த்தின் அப்பா மிகப்பெரிய தயாரிப்பாளர் என்பதால், தன் மகனை சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளர்த்துவிட்டார்.

அந்த சமயத்தில், நடிகர் விக்ரம் படவாய்ப்பு கிடைக்காமல், பிரசாந்த்தின் அப்பாவிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார். ஆனால், அவர் விக்ரமை உதாசீனப்படுத்தி தட்டிக் கழித்திருக்கிறார். அதன் பிறகு, இனி வாய்ப்பைத் தேடி நாம் செல்லக் கூடாது, நம் திறமையைத் தேடித்தான் வாய்ப்பு வர வேண்டும் என்று உறுதி கொண்ட நடிகர் விக்ரம், தனது அசாத்திய நடிப்பால் கொஞ்சம் கொஞ்சமாக உச்சத்தை அடைந்தார்.

இன்றும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். ஆனால், அன்று அப்பாவின் உதவியால் பிரபலமாக இருந்த நடிகர் பிரசாந்த் இன்று அட்ரசே இல்லாமல் போய் விட்டார்.இதனால், இப்போதும் நடிகர் விக்ரமைப் பார்த்தால் பிரசாந்தின் அப்பா தலைகுனிந்து செல்வாராம்.