இதுக்கு மேல கமல்ஹாசனை யாரும் அசிங்க படுத்த முடியாது…. அநாகரிகமாக எல்லை மீறி விமர்சனம் செய்த மன்சூர் அலிகான்..

0
Follow on Google News

ரஜினி – கமல் இருவரும் சினிமாவில் கடும் போட்டியாளர்களாக இருந்து வந்த நிலையில் 1996 முதல் நான் அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என ஒரு பக்கம் ரஜினி ரசிகர்களுக்கு தண்ணி காட்டி வந்தாலும், மறுபக்கம் நான் அரசியலுக்கு வர மாட்டேன், எனக்கு பாராளுமன்ற கட்டிடத்தை பார்த்தாலே ஒரு பயம், என பல நேரங்களில் தான் அரசியலுக்கு வர மாட்டேன் என்பதை உறுதி படுத்தி வந்தவர் கமல்ஹாசன்.

இந்த நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என ரசிகர்களை ஏமாற்றி வந்த ரஜினிகாந்த், தீடிரென நான் அரசியலுக்கு வருவது உறுதி 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என சும்மா இருந்த ரசிகர்களை உசுப்பேத்தி விட, மறுப்பக்கம் எனக்கு அரசியல் என்றாலே பயம் என பேசி வந்த கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்கிற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்தார்.

ஆனால் அரசியலுக்கு வருவது உறுதி என பேசிய ரஜினிகாந்த் வழக்கம் போல் ஏமாற்றி விட்டு ஜகா வாங்கினார். இந்நிலையில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு காட்சிகளையும் கடுமையாக எதிர்த்து தேர்தலை சந்தித்த கமல்ஹாசன் கணிசமான வாக்குகளையும் பெற்றார், மேலும் கமல்ஹாசன் திமுகவை எதிர்த்து அரசியல் செய்த காலகட்டத்தில் பேட்டி ஒன்றில் நீங்கள் எதிர்காலத்தில் திமுக உடன் கூட்டணி அமைப்பீர்களா என கேட்ட போது,

அதற்கு நிச்சயமாக கிடையாது என கமல்ஹாசன் ஆவேசமாக பேசியனார். மேலும் இதற்கு முன்பு நடந்த சட்டசபை தேர்தலின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் விளம்பரம் ஒன்றில், டிவியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசி கொண்டிருக்க, கையில் வைத்திருந்த ரிமோட்டை டிவி மீது எரிந்து திமுக மீது உள்ள கோபத்தை அந்த விளம்பரம் மூலம் கமல்ஹாசன் வெளிப்படுத்தி இருந்தது, மனுஷன் திமுக பக்கம் எந்த காலத்திலும் கூட்டணிக்கு போகவே மாட்டார் போல என பலரும் சில்லறையை சிதற விட்டார்கள்.

இந்நிலையில் தொடர்ந்து அதிமுக திமுக என இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை சந்தித்து கணிசமான வாக்குகளை வாங்கிய கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிக பெரிய ஹிட் அடிக்க அடுத்தடுத்து சினிமாவில் பிஸியானார், அதாவது இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் கமல்ஹாசன் படங்கள் எதுவுமே சரியாக போகாததால் அரசியலில் குதித்தவர், மீண்டும் தன்னுடைய படம் ஹிட் அடித்ததும் சினிமாவில் முழு கவனத்தை செலுத்தினார்.

இந்த நிலையில் இதற்கு முன்பு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன் தற்பொழுது நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது, இதுக்கு தான் கமல்ஹாசன் ரிமோட்டை வைத்து டிவியை உடைத்தாரா.? என பலரும் கிண்டல் செய்யும் விதத்தில் விமர்சனம் செய்து வரும் நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள கமல்ஹாசன்.

ரிமோட்டை எடுத்து டிவியில் அடித்தீர்களே, அங்குதானே செல்கிறீர்கள் என கேட்கிறார்கள். ஆனால், ரிமோட் இன்னும் என் கைகளில் தான் இருக்கிறது; டிவியும் அங்கேயேதான் இருக்கிறது. நம்ம வீட்டு ரிமோர்ட், நம்ம வீட்டு டிவி. அந்த டிவிக்கான கரெண்டையும், ரிமோர்டுக்கான பேட்டரியையும் உருவப் பார்க்கும் சக்தி ஒன்றியத்தில் உருவப்பார்க்கிறது. இனி நான் ரிமோர்ட்டை எறிந்தால் என்ன? வைத்திருந்தால் என்ன? என்று வழக்கம் போல் மக்களை குழப்பும் வகையில் விளக்கம் கொடுத்துள்ளார் கமலஹாசன்.

இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மன்சூர் அலிகான் தற்பொழுது பேசிய பேச்சு ஓன்று கமல்ஹாசனை இதுக்கு மேல் யாரும் அசிங்க படுத்த முடியுமா.? என்கிற கேள்வி எழுந்துள்ளது, அதில் மன்சூர் அலிகான் பேசுகையில், நான் போட்டியிடும் சின்னம் பெறுவதில், டார்ச் லைட் கூட சும்மா தான் இருந்தது, வந்து வாங்கிக் கொள்ளுங்கள், வாங்கிக் கொள்ளுங்கள் என சும்மா தான் கிடைத்தது.

ஆனால் அந்த சின்னத்தை எடுத்துக் கொள்ளவில்லை, ஏனென்றால் இந்த விளக்கு பிடிக்கின்ற வேலையெல்லாம் எனக்கு வேண்டாம் என்பதால் வேறு ஒரு நல்ல சின்னத்தை நான் கேட்டுள்ளேன், என கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் சின்னமாக இருந்த டார்ச் லைட் குறித்து மன்சூர் அலிகான் பேசியுள்ளது, என்ன தான் இருந்தாலும் சினிமாவில் மூத்த கலைஞனை இப்படி அசிங்க படுத்தும் விதத்தில் பேசலாமா என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.