கழட்டிவிட்ட தல அஜித்… கை கொடுத்து தூக்கி விட்ட தல தோனி..

0
Follow on Google News

நடிகர் அஜித்தின் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் துணிவு. பொதுவாக அஜித் ஒரு படத்தின் இறுதி கட்டப்பிடிப்பின் பொழுது தான் தன்னுடைய அடுத்த படத்தில் கமிட் ஆகுவார். ஆனால் துணிவு படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பின் பொழுதே தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் விக்னேஷ் இவனுக்கு கொடுத்த அஜித், அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க கமிட் செய்யப்பட்டது.

இந்த படத்திற்காக நடிகர் நடிகைகள் தேர்வு, மற்றும் லொகேஷன் தேர்வு என அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், படத்திற்கான முழு ஸ்கிரிப்டும் எழுதும் பணியில் மிக தீவிரமாக எழுதி முடித்த விக்னேஷ் சிவன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருந்த நிலையில் சில குளறுபடி காரணமாக படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதமானது. இதனால் பிப்ரவரி இறுதியில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது தீடிரென அஜித் படத்தில் இருந்து வெளியேற்ற பட்டார் விக்னேஷ் சிவன்.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் படம் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்ப கட்டத்தில் தன்னுடைய சினிமா தயாரிப்பு என்பது மாஸாக இருக்க வேண்டும் என்பதால், முதல் படமே நடிகர் விஜய் வைத்து தயாரிப்பதற்கான முயற்சியில் இறங்கியது டோனியின் தயாரிப்பு நிறுவனம். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை.

இதனைத் தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்களை அதிகமாக தயாரித்து வருகின்றது டோனியின் தயாரிப்பு நிறுவனம். ஏற்கனவே தோனியை வைத்து விளம்பர படம் இயக்கியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அந்த வகையில் தோனிக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. நடிகர் அஜித் நடிக்கும் படத்தில் கமிட்டாகி இருந்த விக்னேஷ் சிவன். சுமார் 8 மாதங்களாக அந்த படத்திற்கான லொகேஷன் தேர்வு மற்றும் ஸ்கிரிப் மற்றும் திரைக்கதை என அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டார்.

கிட்டத்தட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு எனக்கு கதை பிடிக்கவில்லை என அஜித் தன்னுடைய படத்திலிருந்து விக்னேஷ் சிவனை காலட்டி விட்டார். இதனைத் தொடர்ந்து அஜித் கமிட்டான ஒரு இயக்குனரை கழட்டிவிட்ட பின்பு, அந்த இயக்குனரின் சினிமா கேரியர் இத்துடன் போச்சு என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே விளம்பர படங்கள் தோனியை வைத்து இயக்கியிருந்த விக்னேஷ் சிவன், அந்த நெருக்கத்தின் காரணமாக தற்பொழுது தோனியின் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி கதை சொல்லி. தன்னுடைய அடுத்த படத்திற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் தோனி தரப்பிலும் விக்னேஷ் சிவன் கதையை ஓகே செய்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் விரைவில் தோனி தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் இறுதி செய்யப்படும் என்றும், மேலும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். அல்லது ஏற்கனவே பிரதீப் ரங்கநாதனிடம் கதை சொல்லி ஓகே செய்து வைத்துள்ள விக்னேஷ் சிவன். டோனி தயாரிக்கும் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆரம்பத்தில் கதை கேட்டு விக்னேஷ் சிவனை கமிட் செய்த அஜித், சுமார் 8 மாதம் அந்த படத்திற்கான விக்னேஷ் சிவன் வேலையும் செய்து, படத்தின் ஸ்கிரிப்ட், திரைக்கதை என பல வேலைகளை முடித்து படப்பிடிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு கதை பிடிக்கவில்லை என தல அஜித் கழட்டிவிட்ட விக்னேஷ் சிவனுக்கு இனி சினிமா கேரியர் அவ்வளவு தான் என பேசப்பட்டு வந்த நிலையில் விக்னேஷ் சிவனின் இருண்டு போன சினிமா வாழ்க்கையில் ஒளி ஏற்று வகையில் தல டோனி வாய்ப்பு கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது