மெக்கானிக்காக ஆரம்பத்தில் அஜித் குமார் சில மாதங்கள் வேலை பார்த்து வந்தார். அதன் பின்னர் எக்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டார். அதன் பின்னர், நடிகர் அஜித் மாடலிங்கில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த நிலையில், 1990ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அஜித்துக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் பிரேம புஷ்தகம், தமிழில் அமராவதி படங்கள் மூலம் அறிமுகமானார் நடிகர் அஜித்.
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அஜித் குமார் தனது அடுத்தக்கட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தனது மகன் ஆத்விக் பிறந்த நாளை கொண்டாடிய அஜித் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாதராண மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து அஜித் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட விளக்கத்தில் அவர் ரெகுலர் செக் அப்பிற்காக மட்டுமே மருத்துவமனை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அஜித்துக்கு அப்பல்லோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அதனை நான்கு மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் அகற்றியதாகவும் தகவல் வெளியானது. மேலும் அஜித் மருத்துவர்களின் திவீர கண்காணிப்பிலேயே இருப்பதாக கூறப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அஜித்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையல்ல என்றும் கூறிய அவர், வழக்கமான பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அதற்கான சிகிச்சை அரை மணிநேரம் நடந்ததாகவும் கூறினார்.
அவர் ஐசியூ எனும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் கண்காணிப்பில் இருந்தார். தற்போது அவரது உடல்நலனில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக உள்ளார். உடல்நலம் சீராக உள்ளது. இதனால் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் அஜித் வரும் 15ம் தேதி அஜர்பைஜானில் ‛விடாமுயற்சி’ படப்பிடிப்பில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் நடிகர் அஜித்தின் உடல்நலம் வேகமாக சீராகி விடுவதால் திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி அஜர்பைஜானில் நடக்கும் ‛விடாமுயற்சி’ படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உடம்பில் என்னதான் காயங்களும் பல முறை அறுவை சிகிச்சைகளை செய்தாலும் தொடர்ந்து உலகம் முழுவதும் பைக் டூர் செல்வேன் என அஜித் ஒவ்வொரு நாட்டிலும் பல கிலோ மிட்டர்கள் பல மணி நேரங்கள் ஓய்வின்றி எப்படித்தான் மனுஷன் பைக் ஓட்டிச் சென்றாரோ என ரசிகர்கள் மட்டுமின்றி பல மருத்துவர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு முயன்றால் முடியாதது எதுவுமில்லை என சாதித்துக் காட்டி வரும் அஜித் மேலும், பல சாதனைகளை சினிமாவிலும் அவரது ரியல் லைஃப் பேஷனிலும் செய்வார் என்பது நிச்சயம்