ஸ்டாலின் வீசும் பந்துகள் அனைத்தும் சுவற்றில் அடித்தது போன்று திரும்பி அவரையே தாக்கும் பரிதாபம்.!

0
Follow on Google News

திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசும் மேடை பேச்சுக்கள் மற்றும் அவருடைய அறிக்கைகள் அனைத்தும் சுவற்றில் அடித்த பந்து போல் திரும்ப அவரையே தாக்கும் சூழல் தமிழக அரசியலில் நிலவி வருகிறது. சமீபத்தில் ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களிடம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “முதல்வர் பழனிசாமியின் நாற்காலி ஆடிக்கொண்டிருக்கிறது. பதவிக்காலம் முடியும் முன் அவரது நாற்காலியை கவிழ்க்க உள்ளுக்குள்ளேயே சில சதிகள் நடந்து வருகின்றன.

தமிழக மக்கள் எந்தக் காலத்திலும் அவரை கருணை காட்ட மாட்டர்கள். .’சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்…’ என ‘எங்கள் வீட்டுப்பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறார். இந்தப்பாட்டு இன்றைக்கு முதல்வர் பழனிசாமியின் கூட்டத்துக்கு பொருந்தும்.” என ஸ்டாலின் பேசியிருந்தார், இதற்கு பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் கூறுகையில்.

முதல்வர் பழனிச்சாமியின் நாற்காலி உட்கட்சி சதியால் ஆடுகின்றது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார், ஆக இவர் கடைசி வரை பழனிச்சாமி நாற்காலியினை ஆட்டவே இல்லை, அது முடியவுமில்லை என ஒப்பு கொள்கின்றார், தோல்வியினை ஒப்பு கொள்ளுதல் என்பது இதுதான். விரைவில் தேர்தல் வர இருக்கும் நிலையில் பழனிச்சாமி அரசு கவிழாவிட்டாலும் தானாக சிலவாரங்களில் காலாவதி ஆக போவது நிச்சயம், இதில் ஸ்டாலின் என்ன ஆச்சரியம் கண்டார் என்பதும் தெரியவில்லை

மேலும் எம்ஜிஆர் நடித்த எங்கள்வீட்டு பிள்ளை படம் 1965ல் வந்தாலும் அப்பாடல் 1970க்கு பின்னரான அதிமுக மேடைகளில் ஓயாமல் ஒலித்தது, 1969ல் எம்ஜிஆர் காலை பிடித்து கெஞ்சி முதல்வரான கருணாநிதி அவருக்கே துரோகம் செய்ததாக சொல்லி அப்பாடலை அடிக்கடி பாடி மகிழ்ந்தனர் எம்ஜிஆர் ரசிகர்கள், எந்த வரி.. இதே வரிதான் “சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்…”

இனி இப்பாடலை யாரெல்லாம் பாடுவார் தெரியுமா? வாஜ்பாய் அரசில் பங்குபெற்ற திமுக என எல்.முருகன், எச்.ராசா வரை பலர் பாடுவார்கள், ஈழப்போர் நடந்த காலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுகவினை காட்டி நாம் தமிழர் கூட பாடுவார்கள், 1996 சம்பவங்களை சொல்லி ரஜினி பாடுவார், என்றும் இது போன்று ஸ்டாலின் பேசும் ஒவ்வொரு பேச்சும் சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி வந்து அவரை தாக்குகிறது என பிரபல அரசியல் விமர்சகர் தெரிவித்துள்ளர்.