இன்றைய (04-11-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். புதிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் சம்பந்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சுபிட்சம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அஸ்வினி : ஆதரவான நாள்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : தாமதங்கள் குறையும்.

ரிஷபம்
எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. நெருக்கமானவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களையும், சந்தேக உணர்வுகளையும் தவிர்த்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : பயணங்கள் சாதகமாகும்.
மிருகசீரிஷம் : எண்ணங்கள் நிறைவேறும்.

மிதுனம்
குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.
திருவாதிரை : புரிதல் உண்டாகும்.
புனர்பூசம் : தெளிவு கிடைக்கும்.

கடகம்
வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான நபர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். இன்னல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூசம் : ஆதாயம் மேம்படும்.
ஆயில்யம் : சுறுசுறுப்பான நாள்.

சிம்மம்
இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மகம் : மாற்றமான நாள்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : சாதகமான நாள்.

கன்னி
ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் அமையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மலரும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : ஆர்வம் உண்டாகும்.
அஸ்தம் : நெருக்கம் அதிகரிக்கும்.
சித்திரை : ஈடுபாடு உண்டாகும்.

துலாம்
கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான கற்பனைகள் தோன்றும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். சஞ்சலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்
நண்பர்களின் மூலம் மனமகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவர் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். அனுபவம் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : சிந்தித்து செயல்படவும்
கேட்டை : மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு
அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். லாபகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூராடம் : லாபம் மேம்படும்.
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

மகரம்
குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் ஈடேறும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய செயல் திட்டங்களை அமைத்து அதை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். அங்கீகாரம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
திருவோணம் : முயற்சிகள் ஈடேறும்.
அவிட்டம் : லாபம் மேம்படும்.

கும்பம்
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணம் வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாகன பயணங்களில் மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.

மீனம்
புதிய முயற்சிகளில் மாற்றமான பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய தொழில் நுட்பம் தொடர்பான கருவிகளில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிறு தொழில் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : சிந்தனைகள் மேம்படும்.