காகிதப் பயன்பாடு இல்லாத அரசாக மாறிய துபாய்!

0
Follow on Google News

துபாய் அரசு முழுக்க முழுக்க காகிதப் பயன்பாடு இல்லாத அரசாக மாறியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை துபாய் அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்தது. இப்போது அதில் முழுமையான வெற்றிக் கண்டுள்ளது. துபாய் அரசாங்கத்தின் 43 பிரிவுகளிலும் முழுக்க முழுக்க காகிதமில்லா பயன்பாடு வந்துள்ளது. இதனை துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் துபாய் அரசுக்கு ஆண்டுக்கு 2650 கோடி மிச்சப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகின் பலநாடுகள் தங்கள் நாட்டில் காகிதப் பயன்பாட்டைக் குறைக்க முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் துபாய் அரசின் இந்த வெற்றி மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையும்.