கொரோனா தொற்றுள்ளவரோடு தொடர்பு… ஆனாலும் கிளப்பில் ஆட்டம் போட்ட பிரதமர்!

0
Follow on Google News

கொரோனா தொற்று இருக்க வாய்ப்பிருப்பதாக எச்சரித்தும் பின்லாந்து நாட்டின் பிரதமர் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டுள்ளார். உலகில் பெண்கள் பிரதமர்களாக இருக்கும் ஒரு சில நாடுகளில் பின்லாந்தும் ஒன்றும். அந்த நாட்டின் பிரதமர் சன்னா மரின்தான் இப்போது சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த செய்தி பிரதமர் சன்னா மரினுக்கும் பொருந்தும். ஆனால் அவர் விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் நடன கிளப் ஒன்றில் விடிய விடிய நடனமாடி கேளிக்கை செய்துள்ளார்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக அவருக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழ முதலில் தான் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டுவிட்டேன் என சொல்லிப்பார்த்தார். ஆனால் எதிர்ப்புகள் வலுவாக எழவே இப்போது மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும் எச்சரிக்கை குறுஞ்செய்தி தன்னுடைய அலுவலக தொலைபேசிக்கு அனுப்பப்பட்டதாகவும், அது வீட்டில் இருந்ததால் தன்னால் அந்த குறுஞ்செய்தியைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.