கொரோனா வைரஸ் பட்டதும் காட்டுக்கொடுக்கும் மாஸ்க்… ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு!

0
Follow on Google News

கொரோனா வைரஸ் பட்டதும் ஒளிரும் விதமாக முகக்கவசங்களை வடிவமைத்துள்ளனர் ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியதில் முகக்கவசங்களுக்கு இன்றியமையாத பங்கு உள்ளது. இந்நிலையில் மேலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒரு புதிய பாய்ச்சலை ஜப்பான் நாட்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மாஸ்க்கை அணிந்திருக்கையில் கொரோனா வைரஸ் அதன் மேல் பட்டால் அந்த மாஸ்க் உடனடியாக மின்ன ஆரம்பிக்குமாம். நோய் எதிர்ப்புக் கட்டுப்பாட்டை துரிதமாக செயல்படுத்தும் நெருப்புக் கோழிகளின் முட்டையில் உள்ள ஆண்டிபாடியோடு ஒளிரும் சாயங்களையும் சேர்த்து இந்த முகக்கவசத்தை உருவாக்கியுள்ளார்கள்.