வீடு வீடாக சென்று முதல்வர் சாப்பிடுவதற்கு பதில் இதை செய்யலாம்..! அண்ணாமலை சரமாரி கேள்வி..

0
Follow on Google News

திருவாரூர் : திருவாரூர் தேரோடும் வீதியான தெற்குரதவீதிக்கு டாக்டர் கலைஞர் சாலை என திமுக தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்குரத வீதியில் அமைந்திருக்கும் பிஜேபி அலுவலகம் முன்பு மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிரடியாக பேசிய மாநில தலைவர் அண்ணாமலை ” மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் திமுக அரசு சார்பில் இடைவிடாமல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. தமிழக முதல்வருக்கு பெயர்மாற்றுவது மனைவியாதியாக உள்ளது. பிரதமர் மோடி இதுவரை ஒரு இடத்திற்கு கூட பெயரை மாற்றவில்லை.

சாலையில்லாத கிராமங்களில் சாலை அமைத்துவிட்டு அதில் கலைஞர் பெயரை வையுங்கள். அதில் தவறு இல்லை.ஜாதிவேறுபாடாது காரணமாக வீடுவீடாக சென்று சாப்பிடுவதும் அதை தனது குடும்ப தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதும் என நாடகத்தை நடத்துகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தனது வீட்டிற்கு அழைத்து மற்ற ஜாதியினருக்கு உணவளிக்கலாமே.

அதைத்தான் சமூக நீதி என சொல்வார்கள். அதை மக்களும் பாராட்டுவார்கள். பிரதமர் வீடு காட்டும் திட்டத்தில் நிதியை விடுவிக்க லஞ்சம் பெற்றதால் இளைஞர் மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவல் பிரதமர் மோடியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மணிகண்டனுக்கு நீதிகிடைக்கும்வரை போராடுவோம்.

திருவாரூர் தெற்குரதவீதியை டாக்டர் கலைஞர் சாலை என பெயர்மாற்றம் செய்யமாட்டோம் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் எழுத்துபூர்வமாக தரவில்லை. இந்த தெற்குரத வீதிக்கு மனுநீதி சோழன் என பெயர் சூட்டவேண்டும்.இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது போல இந்தியாவில் நிகழும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

இலங்கையில் குடும்ப அரசியலின் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கும் இதுபொருந்தும். இந்தியாவில் ஏழு மாநிலங்களில் குடும்ப அரசியல் உள்ளது. மோடி இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட விடமாட்டார். 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தல் திமுகவுக்கு இறுதித்தேர்தல். தெற்குரத வீதிக்கு கலைஞர் பெயரை சூட்டினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒருநாள் கூட செயல்பட முடியாத அளவில் பிஜேபி போராடும்” என அண்ணாமலை உரையாற்றினார்.