வழிப்பறி திருடர்களுக்கு வசதியாக எரியாத தெருவிளக்குகள்..! பத்திரிகையாளரை மிரட்டி பணம் பறிப்பு..

0
Follow on Google News

மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் ‌தெரு விளக்குகள் எரியவில்லை. மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில்தான் 100வார்டுகளும் உள்ளது. அந்த நூறு வார்டுகளுக்குறிய தெரு விளக்குகளும் உள்ளது. தெருவிளக்குகள் பியூஸ் போனாலோ வேறு ஏதாவது காரணங்களால் பழுது அடைந்தாலோ மாநகராட்சி உடனடியாக பழைய தெரு விளக்குகளில் உள்ள பல்பை நீக்கி புதிய பல்பை மாற்றுவதற்கு தாமதம் காட்டி வருகிறது.

இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் அந்தத் தெரு வழியாக செல்லும்போது வழிப்பறி போன்ற திருட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக அமைந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் வேலைக்குச் சென்று இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்புபவர்களை தெருவிளக்குகள் எரியாத பகுதியில் பயணிக்கும்போது திட்டமிட்டு வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு சாதகமாக ஊரடங்கும் உதவியாக தெரு விளக்குகளும் உள்ளது. சமீபத்தில் கூட இரவு நேர வேலை முடிந்து வீட்டிற்கு வரும் பத்திரிக்கையாளர் ஒருவரை பின்தொடர்ந்து வந்து அருவாளை கட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர். இந்த பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் இவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

எனவே மதுரை மாநகராட்சி விரைவில் பழுதடைந்து இருக்கும் தெருவிளக்குகள் உடனடியாக பராமரித்து நடக்கக் கூடிய தவறுகளில் இருந்து மக்களை பாதுகாக்க முன் வர வேண்டும். விடியல் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் கட்சியை சோர்ந்த பிரபல அமைச்சர்களின் தொகுதிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.