சிங்கப்பெண் என நிரூபித்த மேயர் பிரியா… என்ன பெரிய ஜெயலலிதா… மேயர் பிரியா செய்த தரமான செயல்… கொண்டாடும் சென்னை மக்கள்..

0
Follow on Google News

மேயர் பிரியா… மிக சிறிய வயது, அரசியல் முதிர்ச்சி இல்லை, என இளைஞர்களுக்கு, அதுவும் ஒரு பெண்ணுக்கு சென்னை மேயர் பதவி வழங்கப்பட போது, ஆரம்ப கட்டத்தில் கடும் கேலி கிண்டலுக்கு உள்ளானார் சென்னை மேயர். மேடையில் அமர்த்திற்கும் போது, அவர் சிரித்தால் கேலி செய்வது, நடந்தால் கேலி செய்வது என எத்தனை கேலி கிண்டல்கள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தவே மாட்டார் மேயர் பிரியா.

தொடர்ந்து கடந்து இரண்டு வருடத்தில் சென்னையில் ஏற்பட்ட கனமழை காரணமாக மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போதெல்லாம், அனைவருடைய பார்வையும் மேயர் பிரியா பக்கமே திரும்பும், இந்நிலையில் சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தில் தத்தளித்தது. சென்னை மக்கள் குடிநீர், உணவு, மின்சாரம் தவித்தனர்.

ஆனால் இதற்கு முன்பு அதிகம் கேலி கிண்டலுக்கு உள்ளான மேயர் பிரியா மூத்த அமைச்சர்களுக்கு இணையாக சென்னை முழுவதும் பம்பரமாக சுற்றி, வெள்ளத்தில் தத்தளித்த சென்னையை மீட்டெடுக்கும் முயற்சியில் முக்கிய பங்காற்றியவர் என்பதை மலை வெள்ளத்தால் சூழ்ந்திருந்த முக்கிய சாலைகளில் ரெயிட் கோட்டுடன் கையில் வாக்கி டாக்கியுடன் களத்தில் இறங்கி வேலை செய்ததை பார்க்க முடிந்தது.

ஒரு பெண்ணாக இருந்தாலும் கூட, இரவு நேரமானாலும், அதி காலையாக இருந்தாலும், சம்பந்த பட்ட அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் வருவதர்க்கு முன்பே இடத்தில் ஆஜராகும் மேயர் பிரிய, உடனே மீட்பு பணிகளை துரிதபடுத்திவிடுவார். இந்நிலையில் மேயர் பிரியா வசிக்கும் பகுதியில் இருக்கும் மக்கள், நாங்க உங்க ஏரியாவில் தான் இருக்கிறோம், 4 நாட்களாக மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை மக்கள் மேயர் ப்ரியாவை முற்றுகையிட.

நேரடியாக மக்களிடம் பேசி நிலைமையை புரியவைத்து சரி செய்யப்படும் என தன்னை முற்றுகையிட்ட மக்களை பக்குவமாக மேயர் பிரியா கையாண்ட விதம் அருமை. கடந்த 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் தத்தளித்த பொது அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா ஹெலிகாபட்டரில் பார்வையிட்டு சென்றது போன்று இல்லாமல் ஒரு பெண்ணாக களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபடும் மேயர் ப்ரியாவை விமர்சனம் செய்ய அதிமுகவுக்கு என்ன தகுதி இருக்கு என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் சென்னை வெள்ளத்தில் மேயர் பிரியா வீட்டை மக்கள் முற்றுகையிட்டு எங்களுக்கு கரெண்ட் இல்லை, தண்ணீர் இல்லை என்று சொன்னது போன்று, 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டிற்கு மக்கள் சென்றால் என்னவாயிருக்கும் என்கிற கேள்வியம் எழுந்துள்ளது.

அந்த வகையில் 2015 சென்னை வெள்ளத்தில் மக்கள் தத்தளிப்பதை முடி மறைக்க மகளிர் சங்கங்களை தூண்டி விட்டு, சிம்பு – அனிருத் பீப் சாங்குக் எதிராக போராட்ட நடந்த வைத்து, அதை மீடியா மூலம் தலைப்பு செய்தியாக கொண்டு வரும் செயலை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் நடந்தது போன்று இல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தையும் பக்குவமாக ஏற்று கொண்டு, உங்களுக்காக தான் நாங்கள் இருக்கிறோம் என இரவு பகல் பாராமல் மிக்ஜம் புயலில் இருந்து சென்னையை மீட்டெடுக்க போராடிய சிங்க பெண் மேயர் பிரியா என இயல்பு நிலைக்கு திரும்பி வரும் மக்கள் கொண்டி வருவதை பார்க்க முடிகிறது.