எமனாக வந்த எம்.சாண்ட் லாரி.. நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலே பலி.. சென்னையில் நடந்த சோகம்.!

0
Follow on Google News

சென்னை : அரசும் போக்குவரத்து காவல்துறையும் எவ்வளவு அறிவுரை கூறியும் வாகன ஓட்டிகள் திருந்துவதாக இல்லை. தங்கள் உயிரை மட்டுமல்லாமல் எதிரே வரும் வாகனத்திற்கும் பலநேரங்களில் எமனாகி விடுகிறார்கள். அதுபோல நடந்த ஒரு சம்பவம் தாம்பரம் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தாம்பரம் வேளச்சேரி ரோட்டில் அமைந்துள்ள காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாமுத்து. இவருக்கு வயது 20. செம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனது நண்பர் அரவிந்த் என்பவருடன் நள்ளிரவில் தாம்பரத்திலிருந்து தனது இல்லத்திற்கு செல்ல வேளச்சேரி பிரதான சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

வேளச்சேரி பிரதான சாலையில் சேலையூர் போலீஸ் ஸ்டேஷன் அருகில் நண்பர்கள் சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற எம்.சாண்ட் ஏற்றி சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரியை கடக்க முயன்றனர். அப்போது நிலைதடுமாறிய அய்யாமுத்து லாரியில் மோதாமலிருக்க பைக்கை திருப்பினார்.

பைக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சுவற்றில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் அய்யாமுத்து மற்றும் அரவிந்த் இருவரும் தூக்கியெறியப்பட்டனர். இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிக ரத்தப்போக்கினால் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அது இரவல் பைக் எனவும் ஹெல்மெட் போடாமல் அதிவேகமாக வாகனத்தை ஒட்டியதாலும் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.