இந்த பக்கமே வர கூடாது… ஹர்திக் பாண்டியாவை விரட்டிய மும்பை… கேப்டன் பதவியை ஏற்கும் ரோகித் சர்மா..

0
Follow on Google News

ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற பெயருடன் கெத்தாக வலம் வந்து கொண்டிருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்ட போது தான் மும்பை அணி ஐந்து முறையும் கோப்பையை வென்றிருக்கிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக மும்பை அணி ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லவில்லை. இதனால் மும்பை அணி நிர்வாகம் அணியின் கேப்டனை மாற்ற முடிவு செய்தது.

இப்படியான நிலையில், நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இதனால் ஹர்திக் பாண்டியா கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டார். ஒரு பக்கம் தொடர் தோல்விகள், மற்றொரு பக்கம் ரசிகர்களின் எதிர்ப்பு என இரண்டு பக்கமும் நெருக்கடிக்கு ஆளான ஹர்திக் பாண்டியா, தற்போது மன அழுத்தத்தில் துவண்டு போய் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் மனோஜ் திவாரி மும்பை அணியின் கேப்டன் வெகு விரைவில் மாற்றப்படுவார் என்று பகிர் கிளப்பும் வகையில் கூறியிருக்கிறார். மும்பை அணி கடைசியாக ஏப்ரல் ஒன்றாம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி படு தோல்வி அடைந்தது. இதை அடுத்து மும்பை அணி அடுத்த ஆறு நாட்களுக்கு பின்னரே அடுத்த போட்டியில் ஆட உள்ளது.

அந்தப் போட்டிக்கு முன்னதாக மும்பை அணியின் கேப்டனாக மீண்டும் ரோகித் சர்மாவை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக திவாரி தெரிவித்துள்ளார். மேலும் தற்சமயம் ஹர்திக் பாண்டியா மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார் என்பது சில விஷயங்களில் இருந்து நமக்கு தெரிகிறது. ரசிகர்களின் எதிர்ப்பால் அவர் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார். நான் பெரிய விஷயம் ஒன்றை சொல்லப் போகிறேன். இந்த ஆறு நாள் இடைவெளியில் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து கேப்டன்சியை பறித்து ரோகித் சர்மாவிடம் கொடுக்க வாய்ப்புள்ளது என தெரிவித்த மனோஜ் திவாரி.

இந்த கேப்டன்சி மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளது. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பற்றி எனக்கு தெரிந்தவரை, அவர்கள் இது போன்ற முடிவை எடுக்க தயங்க மாட்டார்கள். அவர்கள் தான் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை பறித்து பெரும் சிக்கலை ஏற்படுத்தி வைத்தார்கள். ஐந்து கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்றும் பாராமல் ரோகித் சர்மாவை மாற்றினீர்கள். தற்போது புதிய கேப்டன் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்று தரவில்லை. அவரது கேப்டன்சியும் சரியில்லை நிறைய தவறுகள் நடக்கின்றன இதனால் கேப்டன் மாற்றம் நிகழும் என மனோஜ் திவாரி தெரிவித்துளளார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி நியமனத்தால் மும்பை அணி வீரர்களுக்கு மனக்கசப்புகள் இருந்து வருகிறது, பும்ரா, ரோகித் சர்மா, நேஹல் வதேரா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா உள்ளிட்டோர் பெரிதாக ஆர்வமில்லாமல் இருப்பதை உணர்ந்த மும்பை அணி நிர்வாகம், அடுத்த மேட்சுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை இடைவெளி இருப்பதால்,

மும்பை அணி வீரர்களை மும்பை அணி நிர்வாகம் மொத்தமாக டூர்-க்கு அனுப்பியுள்ளது. அம்பானி மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடைபெற்ற ஜாம் நகருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விடுமுறை கொண்டாட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர், இந்த டூரில் ஹர்திக் பாண்டியா உடன் அணி வீரர்கள் இணக்கமாக இல்லை என்றால், ஹர்திக் பாண்டியாவுக்கு உடல் நிலை சரியில்லை என ஓய்வு கொடுத்துவிட்டு கேப்டன்சியை மற்றும் முடிவில் மும்பை அணி நிர்வாகம் உள்ளதாக கூறப்படுகிறது.