1.5 கோடி காரில் வந்து இறங்கும் ரோட்டோரம் டீ மாஸ்டர்… வருமானம் பிச்சுட்டு போக என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரில் வந்திறங்கி டீ விற்பனை செய்பவரை பார்த்திருக்கிறீர்களா. உண்மையில், ஒன்றரை கோடி மதிப்புள்ள ஆடம்பர காரில் டீ விற்பனை செய்யும் டீக்கடைக்காரர் இந்தியாவில் இருக்கிறார். இவர் உலகம் முழுவதிலும் பிரபலமாகவும் இருக்கிறார். ஒட்டு மொத்த இந்தியர்களின் கவனத்தையும் ஈர்த்த அந்த வித்தியாசமான டீக்கடைக்காரர் யார் எதற்காக இப்படி விற்பனை செய்கிறார் என்பதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

இன்றைய சோசியல் மீடியா நிறைய நெகட்டிவான விளைவுகளை ஏற்படுத்தினாலும், ஏராளமான மக்களின் வாழ்க்கையை பாசிட்டிவாக மாற்றி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. அப்படித்தான் வட இந்தியாவில் உள்ள நாக்பூரைச் சேர்ந்த டோலி சாய்வாளா என்பவரின் வாழ்க்கையையும் புரட்டி போட்டு இருக்கிறது. இவர் தனது வருமானத்திற்காக ரோட்டோரத்தில் டீ கடையை போட்டு டீ விற்பனை செய்து வந்திருக்கிறார்.

பொதுவாக டீ மாஸ்டர் டீ போடும் ஸ்டைல் தனியாக இருக்கும். அதிலும் இந்த டீக்கடைக்காரர் டீ போடும் ஸ்டைல் மக்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்திருக்கிறது. இவர் டீ போடும் ஸ்டைலை பார்ப்பதற்காகவே கூட்டம் கூட்டமாக மக்கள் இந்த கடைக்கு வந்து டீ குடிப்பார்களாம். இவர் டீ போடும் ஸ்டைலை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடவே ஓவர் நைட்டில் பயங்கர பேமஸ் ஆகிவிட்டார்.

உலகம் முழுக்க அதிவேகத்தில் பிரபலம் அடைந்ததால் பலரும் முன் வந்தது இவருக்கு நிறைய ஆபர்களை வழங்கினர். இதனால் குறுகிய காலத்தில் பொருளாதார ரீதியாக அசுர வளர்ச்சி அடைந்தார். உலக பணக்காரரான பில்கேட்ஸ் அவர்களே இவரது கடைக்கு நேரில் வந்து இவர் டீ போடும் ஸ்டைலை பார்த்துச் செல்லும் அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கண்டார்.

இப்படியான சூழலில், சமீபத்தில் டோலி சாய்வாளா ஆடம்பர காரில் வந்திரங்கி டீ போடும் வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் எட்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.
இப்படி எக்க சக்கமான லைக் குவிந்ததற்கு காரணம் அவர் வந்திரங்கிய கார் தான்.

இந்த கார் இந்தியாவில் விற்பனை ஆகும் காஸ்ட்லியான கார்களில் ஒன்றாகும். இந்த கார் 75 லட்சம் முதல் 2 1/2 கோடி வரையிலான விலையில் விற்பனை ஆகிறது. இந்த காரில் 10 விதமான வேரியன்ட்கள் உள்ளன.இந்த காரை பலரும் விரும்பி வாங்குகிறார்கள். இந்தக் கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் இயங்கும் சிறப்பம்சத்தை கொண்டுள்ளது. இவ்வளவு ஆடம்பரமான காரில் இரண்டு பேரும் மட்டும் தான் அமர முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆம், இந்த காரில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

இதனாலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பிரபலங்கள் போன்றோர் மட்டுமே இந்த காரை விரும்பி வாங்குகிறார்கள். அவர்களின் வரிசையில் டோலியும் இப்போது இந்த காரை வாங்கி இருக்கிறார். இந்த காரின் வடிவமைப்பு பலரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது ஏனெனில் இது ஒரு கூபே வகை கார். இந்த காரியம் ஸ்பெஷல் இந்த கார் தனித்துவமான ஸ்டைலில் இருப்பது தான். அது மட்டும் இல்லாமல் இந்த காரால் அதிவேகத்தில் செல்லவும் முடியும். இப்படிப்பட்ட சொகுசு காரை டோலி சாய்வான வாங்கி இருப்பது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பலரும் இவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.