திமுக தலைமையிடம் செம்ம டோஸ் வாங்கிய தர்மபுரி எம்பி செந்தில்குமார்… இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்..

0

திமுக தர்மபுரி எம்பி Dr. செந்தில்குமார், அதிக நேரம் சமூக வலைதளத்தில் பதிவு செய்து நேரத்தை செலவு செய்து பொழுதை கடத்தி வருகின்றவர். இவர் எம்பியாக பதவி ஏற்று அந்த தொகுதி மக்களுக்கு என்ன செய்துள்ளார் என கேட்டால், தேடி …தேடி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியை சுற்றி வந்தாலும் வரலாறு பேசும் அளவுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து சமூக வலைதளத்தில் யாருடனாவது வம்பிழுத்து சண்டையிட்டு திமுக தலைமையை தர்மசங்கடத்தில் தள்ளிவிடுவார் செந்தில்குமார் எம்பி. ரஜினி ரசிகர்களிடம் வம்பிழுப்பது, நாம் தமிழர் சீமான் தம்பிகளிடம் வம்பிழுப்பது, இப்படி அடுத்த கட்சியினரிடம் தான் சமூக ஊடகத்தில் வம்பிழுத்து சண்டையிட்டு பொழுதை கடத்துகிறார் என்றால், அவர் கட்சியை சேர்ந்த திமுக எம்பி தயாநிதிமாறனையும் விட்டு வைக்கவில்லை.

மாறன் சகோதரர்கள் நடத்தும் ஊடகங்களில் தனக்கு முக்கிய துவம் இல்லை என்று வெளிப்படையாகவே மாறன் சகோதர்களை சீண்டினார் செந்தில்குமார் எம்பி. கடந்த 2020ம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் நடித்து, இயக்கி, தயாரித்த ‘ஒத்த செருப்பு’படத்துக்கு மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டது குறித்து திமுக எம்.பி. செந்தில்குமார், “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்” என்று டுவிட் செய்து பார்த்திபன் திறமைக்கு கிடைத்த விருதை இழிவு படுத்தும் விதத்தில் நடந்துகொண்டார்.

இதற்கு பார்த்திபன் வழக்கம் போல் அவரது பாணியில் தரமான பதிலடி கொடுத்து தன்னை கிண்டல் செய்த செந்திகுமார் வாயே திறக்காதபடி செய்தார். இந்த செயலுக்காக அப்போதே உதயநிதி தரப்பில் இருந்தும் செம்ம டோஸ் வாங்கினார் செந்தில்குமார் எம்பி என கூறப்பட்டது. இந்நிலையில் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என எதிர்கட்சிகளால் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அதை உடைக்கும் வகையில் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறாது திமுக தலைமை.

மேலும் திமுக தலைவர் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் தீவிர கடவுள் பக்தி கொண்டவர். இந்நிலையில் சமீபத்தில் தர்மபுரியில் நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியில் இந்து முறைப்படி பூமி பூஜை நடைபெற்றதை உடனே தடுத்து நிறுத்தி, இது திராவிட மாடல் ஆட்சி, இந்த ஆட்சியில் இது போன்று நடந்த கூடாது உடனே இதை நிறுத்துங்கள் என கோபப்பட்டு பேசிய செந்திகுமார் எம்பி, அங்கிருந்த புரோகிதரை விரட்டினார்.

இந்த சம்பத்தை வீடியோவாக எடுத்து, ஒரு அளவுக்கு தான் பொறுமையாக இருக்க முடியும் என அவருடைய சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவு செய்தார். ஆனால் இது அவரை சார்ந்த திமுக கட்சியினர் மத்தியிலே கடும் எதிப்பு கிளம்பியது. மேலும் எதிர்கட்சிகள், திமுகவுக்கு ஒட்டு போட்ட இந்துக்களே பாருங்கள்.! இந்து மதத்தை இழிவு படுத்தும் திமுக எம்பியை பாரீர்.! என சமூக ஊடகத்தில் திமுக எதிர்பாளர்கள் பதிவிட்டு வைரலாக்கி வந்தனர்.

இது திமுகவுக்கு மிக பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுக தலைவர் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் குடும்ப பெண்கள் மத்தியில் செந்தில்குமாரின் செயல் கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து திமுக தலைமையிடம் இருந்து திமுக மூத்த தலைவர் ஒருவரிடம் செந்தில்குமார் எம்பியை கடுமையாக கண்டித்து வைக்குமாறு தகவல் சென்றதை தொடர்ந்து அந்த மூத்த தலைவர் செந்திகுமார் எம்பியை தொடர்பு கொண்டு,

உனக்கு இது தான் கடைசி வார்னிங், நீ எதுவுமே செய்யாமல் வீட்டிலே இருப்பது தான் கட்சிக்கு நல்லது. தலைமையை சங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டாம். இனி இது போல் நடக்க கூடாது என மிக கடுமையா எச்சரித்துள்ளார், எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் பேச கூடிய வடமாவட்டத்தை சேர்ந்த அந்த திமுக மூத்த தலைவர் என கூறப்படும் நிலையில், அடுத்த தேர்தலில் செந்திகுமாருக்கு சீட் உறுதியாக கிடையாது அதனால் முழு நேரமும் அவர் சமூக வலைதளத்தில் விளையாடி கொண்டே இருக்கலாம் என்கிறது திமுக வட்டாரங்கள்.

மாணவி ஸ்ரீநிதி மாரணம்… சமூக போராளிகள் சூர்யா – ஜோதிகா என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா.?