சினிமாவில் வாய்ப்பு தருகிறேன் என சிவகார்த்திகேயன் எவ்வளவு பணத்தை போடுகிறார் தெரியுமா.?

0
Follow on Google News

தனியார் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வெற்றி பெற்று, தொகுப்பாளராக தன்னுடைய நகைச்சுவையால் அவருக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கி, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த போதே பிரபலமானவர் சிவகார்த்திகேயன், தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தவர் சினிமாவில் ஹீரோவாக வெற்றி பெற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் சிவகார்த்திகேயன்.

அவரை தொடர்ந்து காமெடி நடிகர்கள் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் பலர் ஹீரோவாக முயற்சி செய்து ஒரு சில படங்கள் நடித்தாலும் சிவகார்த்திகேயன் போன்று வெற்றி பெற முடியவில்லை. ஆரம்ப கட்டத்தில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு உயரத்துக்கு வளர்ந்து முன்னணி நடிகர் ஆன பின்பு, புதிதாக SK ப்ரோடக்சன் என்று தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, சொந்தமாக படம் தயாரிக்க தொடங்கினார்.

இவருடைய தயாரிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் சிவகார்த்திகேயன் கடனாளியாக மாறினார். மிக பெரிய கடன் சுமையில் தத்தளித்து வந்த சிவகார்த்திகேயன், சிறிய பஜெட்டில் படம் எடுத்து அதிக விலைக்கு விற்க திட்டமிட்டார், இதன் காரணமாக புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் சுமார் 10 அல்லது 20 லட்சம் கொடுத்தால் போதும், அதுவே பெரிய இயக்குனர் என்றால் அதிகம் சம்பளம் தரவேண்டும் என்பதற்காக.

தொடர்ந்து புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். இவருடைய இயக்கத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் போன்ற படங்கள் சிறிய பட்ஜெட்டில் அதிக லாபம் கொடுத்த படம். மேலும் இந்த படங்கள் கொடுத்த லாபம், தன்னுடைய கடனை முழுவதும் கட்டிவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார் என ஒரு வித தகவல் வெளியாகியுள்ள நிலையில்.

இவர் பெரிய இயக்குனர்களுக்கு தனது படத்தில் வாய்ப்பு கொடுத்தால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் , என்பதற்காக, மிக குறைந்த சம்பளத்தில் புது இயக்குனர்களை இவர் படத்தில் வாய்ப்பு கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என்கிற நோக்கில் தான் சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்த தயாரிப்பில் எடுக்கப்படும் படங்களில் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

தமிழ்நாட்டை காலி செய்யும் தமிழ் நடிகர்கள்… ஆந்திராவில் குடியேற என்ன காரணம் தெரியுமா.?