கோவையில் அத்வானி மீது நடத்த இருந்த மனித வெடிகுண்டு தாக்குதல்.! உயிர் தப்பியது எப்படி.?

0
Follow on Google News

1998 பெப்ரவரி 14ஆம் தேதி பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கோயம்புத்தூர் வருகையையொட்டி அவரை படுகொலை செய்ய திட்டமிட்டு நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில், 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் இத்தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டனர். மேலும் 2000 பேர் காயமடைந்தனர். 11 வெவ்வேறு இடங்களில் 12 கிமீ சுற்றுவட்டத்தில் மொத்தம் 13 குண்டுகள் வெடிக்கப்பட்டன.

பாஜக தலைவர் எல். கே. அத்வானி உரையாற்றவிருந்த இடத்துக்கு 100 மீ தூரத்திலேயே முதலாவது குண்டு வெடித்தது.அதன் பின் 4 குண்டுகள் ஆர். எஸ். புரம் என்ற இடத்திலும், இரண்டு பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ஒன்று கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகிலும், மற்றொன்று “உக்கடம்” பகுதியிலும் வெடித்தன. இக்குண்டுவெடிப்புகளுக்கு அல் உம்மா என்ற தீவிரவாத அமைப்பு காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டது,

இதன் பின் குண்டு வெடிப்பு நடந்த அடுத்த நாள்,பிப்ரவரி 15 அன்று காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சந்தேகத்திற்குரிய அல்-உம்மாவைச் சேர்ந்த 6 இளைஞர்கள் திருமால் தெருவில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், பிப்ரவரி 17 அன்று அல்-அமீன் காலனியில் கவனிப்பார் இன்றியிருந்த குண்டு வெடித்ததில் விளையாடிக்கொண்டிருந்த 4 இஸ்லாமிய சிறுவர்கள் இறந்தார்கள். இக்குண்டுத் தாக்குதல்களை அடுத்து சில நாட்களில் இசுலாமியத் தீவிரவாத அமைப்பான அல் உம்மா தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அன்று எல்.கே அத்வானி பேச இருந்த மேடை அருகில் உடலில் வெடிகுண்டை கட்டி கொண்டு, அத்வானி மேடைக்கு வந்தது அவரை கட்டி பிடித்து கொண்டு மனித வெடிகுண்டாக செயல்பட ஒருவர் காத்திருந்த தகவலை அங்கே மேடையின் பாதுகாப்புக்கு இருந்த காவல் துறை அதிகாரி ராஜமாணிக்கம் தற்போது தெரிவித்துள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் அன்று அத்வானி பேச இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் மனித வெடிகுண்டாக செயல்பட இருந்தவன் அவன் உடம்பில் கட்டிய வெடிகுண்டை வெடிக்க வைக்க வில்லை என காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.