அதிமுகவுக்கு குட் பை சொல்லும் பாமக..!திமுக பக்கம் வண்டியை திருப்பும் ராமதாஸ்..! பீதியில் திருமாவளவன்..

0
Follow on Google News

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சமீப காலமான நடவடிக்கைகள் அதிமுக கூட்டணிக்கு குட் பை சொல்லிவிட்டு, திமுக கூட்டணிக்கு செல்ல தயாராவது போன்று இருந்து வருகிறது. அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் சுரப்பாவுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும், தமிழக ஆளுநருக்கு எதிராக கண்டன குரல் குடுத்த போதும், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் எதிர்ப்புக்கு வலு சேர்க்கும் விதத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

சில தினங்களுக்கு முன் மருத்துவ கல்லூரி இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக தலைவர் கடுமையான கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், அவருக்கு வலுசேர்க்கும் விதத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்,“ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை. அந்த இரண்டையும் நீக்கினால் ஆட்டுக்கும் எந்த துன்பமில்லை, நாட்டுக்கும் எந்த நஷ்டமுமில்லை” என பேரறிஞர் அண்ணா கூறியதை தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்து திமுகவுக்கு மறைமுக ஆதரவை வழங்கினார்.

இந்நிலையில் தற்போது கூட்டணியில் உள்ள அதிமுக அரசை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளார், இன்று மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை….. செய்யவும் மறுக்கிறார்கள் என தெரிவித்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் திமுக கூட்டணிக்கு பாமக செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அதன் வெளிப்பாடு தான் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாமக திமுக கூட்டணிக்கு வந்தால் விடுதலை சிறுத்தை கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படும் சூழல் உருவாகும் என்பதால் திருமாவளவன் பீதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.