9,10,11வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் கொடுத்த அதிரடி பரிசு..!

0

கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதம் நாடு முழுவதும் கொரோனா பரவல் வீரியம் அடைந்ததால் மத்திய அரசு நாடு முழுவதும் லாக் டவுனுக்கு உத்தரவிட்டது. பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி எதிர்காலம் பாதிப்படைய கூடாது என்ற நோக்கத்தில் ஆன்லைன் க்ளாஸ் தொடங்கப்பட்டது. தனியார் பள்ளி முதல் அரசு பள்ளிகள் வரை அனைத்து மாணவர்களும் ஆன்லைன் கிளாஸில் பயின்று வந்தனர்.

தற்போது கொரோனாவின் வீரியம் குறைந்து உள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் 2021 ஜனவரியில் திறக்கப்பட்டன. முதலில் 10, 12வகுப்பு மாணவர்களுக்கும் இரண்டாம் கட்டமாக 9, 11 வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த ஆண்டு நடத்தப்படாத தேர்வுகளுக்கு மாணவர்களை ஆல் பாஸ் என தமிழக முதல்வர் எடப்பாடி 2020ல் அறிவித்தார்.

தற்போது 2021, 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு காலம் நெருங்கி உள்ளதால், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டதை யொட்டி 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் நடந்ததோ வேறு, நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி இந்த ஆண்டு மாணவர்கள் அதிகநேரம் ஆன்லைன் கிளாஸ் மற்றும் தொலைக்காட்சியின் மூலமாக கல்வி பயின்றனர்,

ஜனவரி முதல் தான் பள்ளிகள் திறக்கப்பட்டதால் நேரடி கற்றல் திறன் குறைவினால் 9, 10, 11ஆம் வகுப்பு படிக்கும் அனைவரும் ஆல் பாஸ் என்று 110விதியின் கீழ் அதிரடியாக அறிவித்தார். 9, 10, 11 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியாக இருந்தாலும் 12வகுப்பு படிக்கும் மாணவர்கள் நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது என்று முணுமுணுத்து கொண்டனர்.