ஆர்யாவின் டெடி படம் வெளியாவது திரையரங்கில் இல்லையாமே..! ஆர்யா ரசிகர்கள் ஏமாற்றம்…

0
Follow on Google News

நடிகர் ஆர்யா மற்றும் அவரின் காதல் மனைவி நடித்துள்ள டெடி படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். டெடி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தது. தற்போது படக்குழுவினர் இதை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் ஓடிடி-யில் தான் திரைப்படம் வெளிவந்த வண்ணம் இருந்தது. கொரோனா கொஞ்சம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட அந்த வேளையில், தமிழக அரசு 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்தது.

இதன் பிறகுதான் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் போன்ற பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவந்தது.டெடி படமும் திரையரங்குகளில் வெளியாகும் என்ற ஆர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாக போய்விட்டது.

படக்குழுவினர் ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளனர். மார்ச் 12 தேதி டெடி திரைப்படம் டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்னதான் ஓடிடி-யில் வெளியானாலும் திரையரங்குகளில் வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து விசிலடித்து படம் பார்க்கும் சுகமோ சுகம்… காலம் மாறிப் போச்சுங்க…