நடிகர் அஜித் 3 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணமா? வைரல் ட்ரென்டிங் ஆன புகைப்படம்.

0
Follow on Google News

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தன்னுடைய படத்தில் நடிப்பதோடு சரி எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். தன்னுடைய படத்தில தான் நடிக்கும் காட்சிகளில் பைக் ரேஸ் முதல் ஆக்சன் காட்சி வரை எந்த ஒரு டப் ஆர்டிஸ்ட் இல்லாமல் தானே நடித்துள்ளார். இதனால் இவர் பல விபத்துக்களை சந்தித்து உடம்பு முழுவதும் எண்ணற்ற அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.

தான் நடிக்கும் படத்தை ரசிகர்களுக்கு சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொள்வார். அதனாலோ என்னவோ இவரை பற்றி சிறிய செய்தியோ, புகைப்படமோ, புதிய படத்தின் அப்டேட்டோ வந்தால் இவரின் ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது, எந்த ஒரு அரசியல் பின்புலம் கிடையாது, சினிமாவில் யாருடைய உதவியும் கிடையாது,

ஆனால் இவரது ரசிகர்கள் தான் இவரது பின்பலம். நேற்று வெளியான நடிகர் அஜித்தின் சைக்கிளுடன் உள்ள புகைப்படத்தை அவருடன் சென்ற நபரால் பகிரப்பட்டது. அஜித் ரசிகர்கள் அவர் நடித்து முடித்து இன்னும் சில மாதங்களில் திரைக்கு வர இருக்கும் வலிமை படத்தின் அப்டேட் காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில் நடிகர் அஜித் கட்டுக்கோப்பான உடம்புடன் கருப்பு நிற உடையணிந்து இயற்கை சூரியன் உதிக்கும் அந்த மில்க் இச்சூழலில் உள்ள நடிகர் அஜித் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அஜித் குமார் சைக்கிளுடன் வெளியாகி உள்ள புகைப்படத்தில், கொல்கத்தா 924 கி.மீட்டர் உள்ள மைல் கல் மேல் அமர்த்திருக்கும் புகைப்படமும் வெளியாகி உள்ளதால், நடிகர் அஜித் குமார் சென்னையில் இருந்து கொல்கத்தா சென்றும் மீண்டும் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளின் செய்கிறார் என்கிற தகவல் வைரலாகி வருகிறது, ஆனால் இது குறித்து விசாரித்ததில் இந்த தகவல் உண்மை இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.